இராஜபாளையம், பிப்.13- இராஜபாளையம் 18வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செந்தமிழ் செல்வ னுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், திமுக இளைஞரணி சார்பில் பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது. திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராஜன் துவக்கிவைத்தார். நிகழ்வில் திமுக வடக்கு நகர செயலர் மணிகண்ட ராஜா, சிபிஎம் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன், நகரச் செயலாளர் மாரி யப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.