districts

தஞ்சாவூர் சேதமான பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூர், டிச.21 - தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதமான பள்ளி  கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அதனை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி யது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதமான பள்ளி  கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில், அந்த கட்டிடங்கள் இடிக்கப்படாமல் இருந்தது.  இந்நிலையில், திருநெல்வேலி தனியார் பள்ளி விபத்தில் மாணவர்கள் மூவர் இறந்த  சம்பவத்துக்கு பிறகு, கைவிடப்பட்ட கட்டிடங் களை பாதுகாப்பாக இடிக்க மாவட்ட நிர்வா கம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 19 பள்ளி  கட்டிடங்கள், கும்பகோணம் கல்வி மாவட்டத் தில் 14 பள்ளி கட்டிடங்கள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 14 கல்வி கட்டிடங்கள் என  மொத்தம் 49 பள்ளிகளில் உள்ள கழிவறை கள், சமையலறை கூடம், பள்ளி கட்டிடம் என  சேதமடைந்த 96 கட்டிடங்கள் கண்டறியப் பட்டன. இந்த கட்டிடங்களை ஒரு வாரத்துக்குள் இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து சேதமடைந்த கட்டிடங்களை இடிக் கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  

அதன்படி பாபநாசம் அருகே தாளக்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பழமையான ஓட்டுக் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப் பட்டது. இதே போல் மாவட்டத்தில் உள்ள கணக் கெடுப்பு நடத்தப்பட்ட கட்டிடங்களை அந்தந் தப் பகுதியில், பாதுகாப்பாக இடித்து அகற்ற  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிபிஎம் கோரிக்கை இந்நிலையில், பல இடங்களில் கூடுதல்  வகுப்பறைகள் இல்லாமல் அரசுப் பள்ளிகள்  நெருக்கடியான இடங்களிலும், கிராமப்புறங் களில் ஊராட்சிக்கு சொந்தமான கிராம சேவை  மையங்கள், கோயில், மண்டபங்கள் ஆகிய  இடங்களில் செயல்பட்டு வருகிறது. சேத மான கட்டிடங்களை இடித்து அகற்றியதும், உடனடியாக அந்த இடத்தில் புதிய கட்டி டங்களை கட்டித் தர வேண்டும் என பெற் றோர்களும், மாணவர்களும் எதிர்பார்க்கின்ற னர். எனவே, மாநில அரசு இதனை கவனத்தில்  கொண்டு, தேவையான இடங்களில் புதிய  கட்டிடம் கட்டித்தர வேண்டும் என  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.

;