districts

img

திருநகரத்தில் தரமான சாலை அமைக்கக் கோரி சிபிஎம் மறியல்

அருப்புக்கோட்டை, செப்.14- அருப்புக்கோட்டையில் உள்ள திரு நகரம் பகுதியில் தரமான சாலை அமைக்கக் கோரி செப்டம்பர் 14 புதனன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை 16 வது வார்டுக்கு உட்பட்டது திருநகரம். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இதனால் சாலை கள் முழுவதும் சேதமாகின. இந்நிலை யில்,அங்கு புதிய சாலை அமைக்க வேண்டு மென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நகராட்சி நிர்வாக மானது,  திருநகரம் சிவானந்தம் தெரு, மலை யரசன்கோவில் தெரு உட்பட பல்வேறு  பகுதிகளில் சாலை அமைக்க ரூ.1கோடியே 63 லட்சத்து 10 ஆயிரம் அளவில் திட்ட  மதிப்பீடு தயார் செய்து,  சாலை அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட்டுள்ளது இதையடுத்து, ஒப்பந்தக்காரர் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளார். அதில்.  சிவானந்தபுரம் தெருவில் உள்ள பள்ளங்களில் கிராவல் மண்ணை போடா மல், கட்டிடக் கழிவுகளை கொட்டியுள் ளார்.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன் சிலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்பு, இதுகுறித்து நகராட்சி உயர்  அதிகாரிகளிடம் கட்சியினர் புகார் தெரி வித்தனர். அதன் பிறகும், நகராட்சி அதி காரிகள் ஒத்துழைப்புடன் ஒப்பந்தக்காரர்,  கட்டிடக் கழிவுகளை சிறிதளவு மட்டுமே அள்ளிவிட்டு, தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணியைத் தொடர்ந்துள்ளார். இதனால், ஆவேசமடைந்த பொது  மக்கள், தரமான முறையில் சாலை அமைக் கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் சாலை மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது. பின்பு, தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தரமான முறையில் சாலைப் பணிகள் நடைபெறும் என உறுதியளித்த னர். இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.   முன்னதாக நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம. தாமஸ், நகரச் செயலாளர் எஸ்.காத்த முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் பி. அன்புச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நகர்க்குழு உறுப்பி னர்கள் எஸ்.பழனிச்சாமி, கே.சுப்பிரமணி, ஒன்றியகுழு உறுப்பினர் எம்.காமாட்சி நாதன், கிளைச் செயலாளர் எஸ்.கே.பெரிய சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;