நாகர்கோவில் டிச. 03 சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்கலை வட்டாரக் குழு சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டாரக்குழு உறுப்பி னர் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.வி.பெல்லார்மின், மாவட்டக் குழு உறுப்பினர் சைமன் சைலஸ், சந்திரகலா, தக்கலை கிளை உறுப்பினர் ஜாண் ராஜ், வட்டாரகுழு உறுப்பினர்கள் ,ஒய்வு பெற்ற தலைமையாசிரி யர்கள் முரளிதரன், அரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் திங்கள்நகரில் சிபிஎம் வட்டாரச்செயலாளர் டிஜே. புஷ்பதாஸ் தலைமையில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.ஆர்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.