districts

img

சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, டிச.2- சிறுபான்மையினர் உரிமை  தினமான டிசம்பர் 1 புதன் கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி களக்காடு ஒன்றி யக் குழு சார்பாக ஏர்வாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு செயலாளர் பூலுடையார்  தலைமையில் சிறுபான்மை மக் கள் நலக் குழு மாவட்டச் செயலா ளர் வீ.பழனி. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பீர்முகமது ஷா, நான்குநேரி ஒன்றியச் செயலாளர் பி.எம்.முருகன், ஒன்றியக் குழு ஊறுப்பினர்கள் பிச்சுமணி, ரமேஷ். திருமலைநம்பி ஹரிஸ் குமார் எம். எம்.கமால். திருக் குறுங்குடி எஸ்.சுந்தர்ராஜ். ஆலங்குளம் காளிமுத்து. சன்ஸ் குமார் ரோஸ் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.