திண்டுக்கல். ஜுலை.27- திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீடு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது வார்டு உறுப்பினர் கே.மாரியம்மாள் மற்றும் 8 திமுக உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் மாநகராட்சியில் வரி விதிப்பு மற்றும் மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வியாழ னன்று காலை ஆணையர் மகேஸ்வரி தலை மையில் நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் 8 பேரும், சிபிஎம் உறுப்பி னர் ஒருவரும் என 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் சிபிஎம் மாமன்ற 11வது வார்டு உறுப்பினர் கே.மாரி யம்மாள் வேட்புமனுத்தாக்கல் செய்தார். 2வது வார்டு சிபிஎம் உறுப்பினர் கே.எஸ்.கணேசன் முன்மொழிந்தார். திமுக வார்டு உறுப்பினர் விமலா வழிமொழிந்தார்;. திமுக மன்ற உறுப்பினர்கள் 1வது வார்டு எம்.கிருபாகரன், 5வது வார்டு ஜே.ஸ்வாதி, 10வது வார்டு ஜே. பானுப்பிரியா, 20வது வார்டு ஜே.ஜெயந்தி, 33வது வார்டு ஏ. ஜான்பீட்டர், 38வது வார்டு ஏ.வசந்தி, 44வது வார்டு ஏ.மார்த்தாண்டன், 47வது வார்டு கே.சுபாஷினி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். பின்னர் வேறு உறுப்பினர்கள் போட்டியிடாததால் இவர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரி விதிப்புக் குழு தலைவராக 1வது வார்டு திமுக உறுப்பினர் எம்.கிருபாகரன் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலை அதி முக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இக் கூட்டத்தில் மேயர் இளமதி ஜோதிபிர காஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். (ந.நி.)