districts

img

விலை உயர்வை கட்டுப்படுத்துக! கட்டுமான தொழிலாளர்கள் மறியல்

திருநெல்வேலி, டிச.2- கம்பி, சிமெண்ட், ஜல்லி, சிமென்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண் டும், கட்டுமானத் தொழிலாளர் களின் இயற்கை மரணம் இரண்டு லட்சம் பெண் தொழிலாளர்களுக்கு  55 வயதில்  பென்சன் வழங்க வேண் டும், பெயிண்டர் களின்  வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்படும் ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்தை தடை செய்ய வேண் டும், மாவட்ட ஆட்சியர் தலைமை யில்  நடைபெறும் கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் தோறும் நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அரு கில் சிஐடியு மாவட்ட கட்டுமான தொழிலாளர் நலச்சங்கம் சார் பில் மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கட்டு மான தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் போராட்டத்தை துவக்கி வைத்து  பேசினார். சிஐடியு ஆட்டோ ஓட்டு னர் சங்க மாவட்ட பொதுச்செய லாளர் ஆர். முருகன், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், அருணா சலம், சங்கர், ஜான் ஜெயபால், பேரின்பராஜ்,மோகன்ராஜ், சங்கரநாராயணன் உட்பட 75 பேர் கலந்து கொண்டனர்.