திருவனந்தபுரம், அக்.12- கேரளத்தில் ஆலுவாவை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை வஞ்சியூர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ எல்தாஸ் குன்னப்பிள்ளி மீது கடுமையான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஏழு இடங்களில் அவர் சித்திரவதை செய்யப் பட்டதாகவும், காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற ரூ.30 லட்சம் பேரம் பேசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் எம்எல்ஏ மீது கடத்தல், அடிதடி வழக்குகளுடன் சேர்த்து பாலியல் வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருடன் நட்பாக பழகிய பின், எம்எல்ஏ பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். நண்பர்களுடன் வீட்டுக்கு வந்த அவர் குடித்துவிட்டு அடித்து உதைத் துள்ளார். தனது செல்வாக்கை பயன் படுத்தி ஹனிட்ராப் வழக்கில் சிக்க வைக்க முயன்றதாகவும், புகார் அளிப்பதாகவும் மிரட்டினார் என வாக்குமூலத்தில் கூறப் பட்டுள்ளது. குடிபோதையில் வீட்டுக்கு வந்த எம்எல்ஏ புகாரை வாபஸ் பெறச் சொன்னார். அவர் ஏற்காததால், வஞ்சி யூரில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்து க்கு அழைத்துச் சென்றனர். இங்குதான் ரூ.30 லட்சம் வழங்குவதாக சமரசம் பேசப்பட்டது. வெள்ளைத்தாளில் கையெ ழுத்து போடவும் வற்புறுத்தினர். இதற்கு தயாராகாத அவர் மீண்டும் தாக்கப் பட்டார். இந்த காட்சிகளை அருகில் இருந்த வர்கள் செல்போனில் படம் பிடித்தனர். மிரட்டலுக்கு பயந்து தமிழகத்தில் பதுங்கி யிருந்ததாக அந்த பெண் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
தனது புகாரின் பேரில் கோவளம் காவல் ஆய்வாளர் எம்எல்ஏவை வரவழைத்தார். ஆனால், அவரது வாக்குமூலத்தை பெற்று வழக்குப்பதிவு செய்ய அவர் விரும்ப வில்லை என்றும், நேரடியாக புகாரை வாபஸ் பெற வற்புறுத்தியதாகவும் அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகார் சட்டமன்ற உறுப்பினர் எல்தோஸ் குன்னப்பிள்ளி, காரில் இருந்த பெண்ணை அடிப்பதை பார்த்ததாக நேரில் பார்த்த வர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் கோவளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. காரில் இருந்த பெண்ணை எம்எல்ஏ அடிப்ப தாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்ததும் குன்னப்பிள்ளி, தான் எம்.எல்.ஏ., மனை வியும் உடன் இருப்பதாகவும் கூறினார். தங்களுக்குள் ‘சவுந்தர்ய பிணக்கம்’ (ஊடல்) மட்டுமே உள்ளதாக எம்.எல்.ஏ., போலீசாரிடம் பொய் கூறினார். அதை நம்பிய போலீசார் திரும்பிச் சென்றனர். எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அந்த பெண் 28ஆம் தேதி மாநகர காவல்துறை தலை வரிடம் புகார் அளித்தார். இது கோவளம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மணிக்கு சாட்சியமளிக்க வருவேன் என அப்பெண் தெரிவித்திருந்தார். அப்போது, காவல்துறையினர் எம்எல்ஏ வை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவர் பேச மறுத்து விட்டார். இரவு 8 மணிக்கு, எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி விசாரணை அதிகாரியான கோவளம் ஆய்வாளர் ஜி.பிரைஜூவை அழைத்து, பிரச்னை இல்லை என்று கூறினார். ஆனால், அக்டோ பர் 11 செவ்வாயன்று அந்த பெண், எம். எல்.ஏ.வுக்கு எதிராக கோவளம் போலீ சில் வாக்குமூலம் அளித்ததோடு, ‘சவுந்த ரிய பிணக்கம்’ கதை உடைந்தது. இதை யடுத்து போலீசார் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன்பும் வாக்குமூலம் அளித்துள் ளார்.