நாகர்கோவில், ஆக.31- குமரி மாவட்டத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த எம்.கதிர்வேல் (87) முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் செவ்வாயன்று (ஆக.31) உயிரிழந்தார். இவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் மைலாடி பகுதியில் சிபிஎம் ஸ்தாபக தலைவராகவும், வட்டாரக்குழு உறுப்பினராகவும், மைலாடி பேரூராட்சி உறுப்பினராகவும் செயல்பட்டார். வாழ்நாள் முழுவதும் கட்சிப் பணிகளிலும் மக்கள் பணியிலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர். புதனன்று மைலாடியில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் மோகன், மூத்த தலைவர்கள் என்.முருகேசன், மலைவிளை பாசி, மணி, சந்திரன் ,கிளை செயலாளர் தர்மலிங்கம் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.