தூத்துக்குடி,டிச.8 3 சென்ட் அந்தோணியார்புரம் தோழர் எம். கண்ணுச்சாமி உடல்நலக்குறைவால் புதனன்று காலை காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் உப்பு தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகியும் அரசு ஊழியர் சங்க அலுவலக பணியாளரும் (இரவு காவலர்) தூத்துக்குடி தென்பகுதி முழுவதும் தீக்கதிர் நாளிதழை தனது இறுதிக்காலம் வரை விநியோகம் செய்த வருமாவார். அவருக்கு மனைவியும் 3 மக்களும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சி வியாழக் கிழமை காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநி லக்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தா.ராஜா, புவி ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து, உள்ளிட்ட கட்சி தோழர்கள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.