districts

img

50 போட்டிகளில் முதன்மை பெற்ற கல்லூரி மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு

சிவகங்கை, செப்.22- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆர்.சி தெருவில் வசித்து வருபவர் செந்தி  வேலம்மாள். இவர் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் எம் .காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி செந்தி வேலம்மாள் பேச்சு  போட்டியில் முதன்மை பெற்றதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன்ரெட்டி பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார். மாணவி செந்திவேலம்மாளை நேரில் சந்தித்தபோது அவர் கூறுகையில், மானா மதுரை அரசு உதவி பெறும் ஆர்.சி நடு நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்  கும் போது பேச்சு போட்டியில் பங்கேற் றேன். முதன்மை பெற்றேன். இதன் பின்பு  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9,10, பிளஸ்ஸ்- 1, பிளஸ்-2 ஆகிய வகுப்பு களில் படித்தேன். அழகப்பா அரசு கல்லூரி யில் பி.காம் முடித்து, அரசு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியில் எம்.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரு கிறேன். பல்வேறு பேச்சு போட்டி, கட்டுரை  போட்டிகளில் பங்கு பெற்று ஐம்பதுக்கு  மேற்பட்ட சான்றிதழ் விருது பெற்றிருக்கி றேன். குறிப்பாக அண்மையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அண்ணா ஆய்வு இருக்கை சார்பாக நடைபெற்ற பேச்சு போட்டியில்  முதன்மை பெற்றேன்.  அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பரிசும் சான்றிதழும் வழங்கினார்.

உலக  சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் நடை பெற்ற பேச்சு போட்டியில் 1100 பேர் பங்கேற்  றார்கள். இதில் 16 ஆவதாக வெற்றி பெற்  றேன். கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கி றேன். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமும் என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியில் பங்கேற்று முதன்மை பெற்  றேன். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பேச்சு போட்டியில் பங்கேற்று முதன்மை பெற்றேன். வேலம்மாள் அறக் கட்டளை சார்பாக வள்ளல் பாண்டித்துரை நினைவு பேச்சு போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன் .தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற பேச்சு போட்டியில் கலை இரவு மேடையில் முதன்மை பரிசு பெற்றேன். தேசிய மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் பங்கேற்று முதன்மை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன்ரெட்டியிடம் சான்றிதழும் பரிசும் பெற்றேன். இன்றைய தினம் சமூக மாற்றத்  திற்காக கருத்தை பதிவு செய்த பெரியார் அவர்கள் குறித்தான பேச்சு போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றேன் .படிப்பி லும் சிறப்பு பெற்று வருகிறேன்.இத்தோடு கூடுதல் சிறப்பாக பேச்சுப் போட்டியிலும், கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்று முதன்மை பெற்றிருக்கிறேன் என்று தெரி வித்தார்.

;