districts

img

கூட்டுறவு ஊழியர் சங்க தேனி மாவட்ட பேரவை

தேனி, டிச.25- தேனி மாவட்ட கூட்டுறவு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட பேரவை தேனியில் மாவட்ட செயல் தலை வர் த.பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது. பேரவையில் மாவட்ட தலைவராக.எம்.இராமச்சந்திரன் ,மாவட்ட செயல் தலைவராக த. பிச்சைமணி மாவட்ட செயலாள ராக பா.செந்தில்காமு மாவட்ட பொருளாளராக பி.கருப்பசாமி உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மற்றும் 23 பேர்கள் கொண்ட மாவட்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட் டது. நிர்வாகிகளை அறிமுகப் படுத்தி மாநில தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை யாற்றினார்.  பேரவையில் பணிவரன் முறைப்படுத்தப்படாத ஊழியர் களை பணி வரன்முறைப்படுத்தி பதவி உயர்வும் வழங்க வேண் டும், பொங்கல் பொருட்கள் வழங் கும் போது வாகன வாடகை, ஏற்று கூலி இறக்கு கூலி வழங்க வேண் டும், போனஸ் சட்டத்தை திருத்தி ரூ.8400 அனைவருக்கும் போனஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு பொருட்கள் பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.