சிவகங்கை, ஜூலை 2- சிவகங்கை நகராட்சிப் பகுதியில், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கூட்டு துப்புரவுப் பணிகள் (Mass Cleaning) மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்பு ணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் முன்னிலை வகித்தார். , நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள்அயூப்கான்,ஜெயகாந்தன், சரவணன், விஜயகுமார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் நலிவடைந்தோர்க்கு உதவிகள்,உணவுகளை வழங்கி னார்.