districts

img

பட்டாசு- தீப்பெட்டித் தொழிலை பாதுகாக்க சிஐடியு விருதுநகர் மாவட்ட 11- வது மாநாடு வலியுறுத்தல்

விருதுநகர்.  செப்,19 விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்க ணக்கான தொழிலாளர்களுக்கு வேலை  வாய்ப்பை அளித்து வரும் பட்டாசு-தீப்பெட்டி தொழில்களைப் பாதுகாக்க ஒன்றிய. மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பச்சை உப்புக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பட்டாசு தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும் இஎஸ்ஐ பி,எப் பிடித்தம் செய்ய வேண்டும். போக்குவரத்துத்துறை,  பள்ளி மாணவர்கள் செல்லும் நேரங்களில் அரசுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்க வேண்டும், தேவையான. தரமான உதிரிபாகங்களை வாங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், இலவசப் பேருந்துளை போக்கு வரத்து அதிகாரிகள் ஸ்டிக்கரை கிழித்து கட்டணப் பேருந்துகளாக இயக்கும் போக்கைக் கைவிட வேண்டும், தமிழஅரசு அச்சுத்  தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், அச்சுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற பஞ்சாலைத் தொழி லாளர்களுக்கு ஊதியத்தில் பாதி அல்லது குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ,24 ஆயிரம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணி நிறைவு செய்தவர்களை நிரந்தம் செய்யவேண்டும்.

தமிழக அரசு. பள்ளிச் சீருடை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு நிர்வாகங் கள் பாரபட்சம் இன்றி துணிகளை வழங்க வேண்டும், வீடு. கடைகளில் துணி தைப்போ ருக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சிஐடியுவின் விருதுநகர் மாவட்ட 11-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் திங்களன்று நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் எம்,மகாலட்சுமி தலைமை வகித்தார். சிஐடியு கொடியை  மாவட்ட உதவித்தலை வர் ஜி,வேலுச்சாமி ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.பால சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். அஞ்சலித்தீர்மானத்தை  எஸ்தர்ராணி முன்மொழிந்தார். மாவட்டச் செயலாளர் பி,என்,தேவா வேலை அறிக்கையையும். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொரு ளாளர் வி.ஆர்.செல்லச்சாமி ஆகியோர்  சமர்பித்தனர், மாநில உதவித் தலைவர் ஆர். சிங்காரவேலு  மாநாடை துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டை வாழ்த்தி விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் சி.ஜோதி லட்சுமி வாழ்த்திப் பேசினார்.  மாநிலச் செயலாளர் ஆர்,எஸ், செண்பகம் நிறைவு செய்து பேசினார். வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்,விஜயபாண்டி நன்றி கூறி னார். மேலும் இதில்.  மாநிலக் குழு உறுப்பி னர்கள் எம். அசோகன், எம்.திருமலை உட்பட ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். நிர்வாகிகள் தேர்வு  மாவட்டத் தலைவ ராக எம்.மகாலட்சுமி.   மாவட்டச் செயலாள ராக  பி.என்.தேவ, மாவட்டப் பொருளாளராக வி.ஆர்.செல்லச்சாமி,  மாவட்ட உதவித் தலைவர்களாக எம்.திருமலை, ஜி.கணேசன், எம்.சாராள், எம்.வெள்ளத்துரை, ஆர்.எம்.மாரியப்பன், கே.விஜயகுமார், ஆர்.சோம சுந்தரம், வி.சந்தனம், மாவட்ட இணைச் செயலாளர்களாக ஆர்.பாலசுப்பிரமணி யன், பி.ராமர், வி.சந்திரன், எம்.கார்மேகம், எம்.சி.பாண்டியன், எம்.பிச்சைக்கனி, எம். பரமசிவம், எம்.சுரேஷ்குமார், உயிர்காத் தான் உட்பட   41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

;