districts

img

அவுட்சோர்சிங் முறையை கண்டித்து சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் போராட்டம்

விருதுநகர், பிப்.22- போக்குவரத்து கழ கத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட  பல்வேறு பணிகளை அவுட்சோர்சிங் முறையில்  வழங்குவதை கண்டித்து    சிஐடியு அரசுப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடை பெற்றது. விருதுநகர் பணிமனை மன்பு நடைபெற்ற இப் போராட்டத்திற்கு எம்.முத்து ராஜ் தலைமையேற்றார். மண்டல உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி  கண்டன உரையாற்றினார். மேலும்  இதில் மத்திய சங்க பொரு ளாளர் எம்.கார்மேகம், கிளைச் செயலாளர் சின்னத்  தம்பி உட்பட பலர் பங்கேற் றனர். திருவில்லிபுத்தூர்  சிஐடியு சார்பில் திரு வில்லிபுத்தூர் கிளையில் கிளைத் தலைவர் முனீஸ்வ ரன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ராஜா ,பொருளா ளர் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வத்தி ராயிருப்பில் கிளை தலை வர் முருகன் தலைமை தாங்கினார். கிளைச் செய லாளர் பெரியசாமி பொரு ளாளர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.