பைக்குகள் மோதி ஒருவர் பலி
நத்தம், அக்,13- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(35) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 8 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் நத்தத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். ‘அப்போது உலுப்பகுடி- ஊரணிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம்,ரவிச்சந்திரனின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் இறந்தார். இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேனி கிளை மேலாளரின் அராஜகத்தை கண்டித்து சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, அக்.13- தேனி போக்குவரத்து கிளை மேலாள ரின் அராஜகப் போக்கை கண்டித்து சிஐ டியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங் கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தேனி அரசு போக்குவரத்து கழக பணி மனையில் பராமரிப்பு பிரிவில் உதிரி பாகங் கள் வாங்கி தராத நிலையில், பணிமனை யில் நிற்கும் பேருந்து உதிரிபாகங்களை கழற்றி பணி செய்ய கட்டாயப்படுத்தும் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்த பராமரிப்பு தொழிலா ளர் கண்ணன் என்பவரை இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு கிளைச் செயலாளர் ஆர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். தலைவர் முருகன், பொருளாளர் வி. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் டி. ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் ஜி. சண்முகம் ஆகியோர் ஆதரித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு மறுத்து காதலனின் பெற்றோர் திட்டியதால் மாணவி தற்கொலை
கிராம மக்கள் சாலை மறியல்
ள் சாலை மறியல் திண்டுக்கல், அக்.13- சாதியின் பெயரால் காதலர்களின் திரு மணத்திற்கு காதலனின் பெற்றோர் தடை விதித்ததால் தலித் வகுப்பைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்டார். புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் சாதி ஆதிக்கச் சக்தியினருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். பழைய வத்தலகுண்டில் உள்ள தேவேந் திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகள் பிரபா. (வயது 27). இதே ஊரில் வசிக்கும் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் மற்றும் பிரபா ஆகியோர் சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்.அகாடமியில் பயிற்சி பெற்றனர். படிக்கும் போதே இருவரும் காதலித்து வந் துள்ளனர். பயிற்சி முடித்ததும் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக இரு தரப்பு பெற்றோர்களிடம் பேசினர். சதீஸ் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து குடும்பத்தினரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் சதீஸ் பிரபாவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மேலும் சதீசுக்கு திருமணம் செய்ய பெண் பார்க்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வந்ததை அறிந்த பிரபா காதலன் சதீஸ் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். காதலன் சதீஸ்குமாரின் தாய் பிரபாவை சாதியைச் சொல்லி கேவலமாக திட்டியதையடுத்து மனம் உடைந்த பிரபா வீட்டுக்கு வந்து விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடந்த 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடை பெற்றது. இதனையடுத்து பிரபாவின் தந்தை வெள்ளைச்சாமி வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அதே நாளில் புகார் அளித் துள்ளார். ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சாதி ஆதிக்க சக்தி யினருக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வில்லை. இதனை கண்டித்து பழைய வத்தலகுண்டு தலித் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை இந்த சம்பவத்தை அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலை வர்கள் எம்.ஆர்.முத்துச்சாமி, கே.டி.கலைச் செல்வன், சிபிஎம் வத்தலகுண்டு ஒன்றி யச்செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றி யக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் ஆகி யோர் பிரபாவின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் ஆறுதல் கூறினர். இந்த பிரச்சனையையொட்டி காவல் துறை உடனடியாக புகார் மனுவின் மீது குற்றவாளிகளை தாழ்த்தப்பட்டோர் வக் கொடுமை வழக்கிலும், தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் பதிவு செய்து சதீஸ்குமார் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் வலி யுறுத்தியுள்ளனர். (நநி)
பழனி அரசு அருங்காட்சியகத்தில் தபால் தலை கண்காட்சி
பழனி, அக்.13- பழனி அரசு அருங்காட்சியகத்தில் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக் கப்பட்டுள்ளன. இந்த மாதம் தபால்தலை கண்காட்சி தொடங்கியது. இதில், இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வெளியிடப் பட்ட தபால் தலைகள், தற்போது பயன்பாட்டில் உள்ள தபால் தலைகள் என பல்வேறு தபால் தலைகள் பார் வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாண வர்கள், பொதுமக்கள் பலர் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறுகையில், தேசிய தபால் தினத்தையொட்டி தபால் தலை கண்காட்சி நதொடங்கியது. இந்த கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு தபால் தலைகள் என சுமார் 1, 500 தபால் தலைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. மேலும் அஞ்சல் துறையை பற்றிய விவ ரங்கள், சேவைகள் ஆகியவை குறித்த விவரமும் உள்ளது. இந்த தபால் கண்காட்சி வருகிற 24 ஆம் தேதி வரை நடை பெறுகிறது என்றார்.
பெண் குழந்தைகள் தின உறுதியேற்பு
திருவில்லிபுத்தூர், அக்.13- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா அயன் கரிசல்குளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி யில் சைல்டுலைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு இணைந்து சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் டெஸ்ட் சைல்டுலைன் ஒருங்கிணைப்பா ளர் விஸ்வநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு ஜானகி, காவல் துறை சார்பு ஆய்வாளர் நமசிவாயம், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், ஆல்தி சில்ட்ரன் ஒருங்கிணைப்பாளர் ஜோசப், அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் தலைமை அஞ்சலகத்தில் இரவு 8 மணி வரை சேவை நீட்டிப்பு
இராஜபாளையம், அக்.13- தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் மதியம் மூன்று மணி வரை சேவைகள் இருந்து வந்த நிலையில் கூரியர் சர்வீஸ் துவக்கப்பட்டு வளர்ச்சி கண்டது. இந்நிலை யில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம் ஆகிய தலைமை அஞ்சலகங்களில் இரவு 8 மணி வரை பதிவு தபால் விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் தலைமை அஞ்சலக அலுவல கத்தில் துணை கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் இந்த சேவையை துவக்கி வைத்தார். தலைமை அஞ்சலக அதி காரி சண்முகராஜ் வரவேற்றுப் பேசினார். அஞ்சலக அலு வலர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். விரைவு தபால்கள் 50 கிராம் வரை ரூ.41- மட்டுமே பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற் குள் அந்தந்த முகவரியில் போய்ச்சேரும் என்பதை தெரி வித்தனர்.
பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசிக்க ஆஸ்திரிய பொறியாளர்கள் முடிவு
பழனி, அக்.13- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு திருவிழா காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதும், பழனிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு கொடைக்கானலுக்கு செல்வதும் வழக்கம். இவ்வாறு வருகிற சுற்றுலா பயணிகள், 64 கிலோமீட்டர் தூரம் கொண்ட பழனி-கொடைக்கானல் மலைப்பாதை வழியாக பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த மலைப்பாதையில் சென்று வர சுமார் 3 மணி நேரம் ஆகும். அபாயகரமான கொண்டைஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்தை எளிதாக்கவும், சுற்றுலா, வணிகம் வளர்ச்சி பெறவும் பழனி-கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த திட்டம் குறித்து, கடந்த 2005 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த திட்டம் பற்றி எவ்வித அறிவிப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 18 இடங்களில் ரோப்கார் திட்டம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதில் பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டமும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தனியார் ரோப் நிறுவன என்ஜினீயர்கள் மார்க்ஸ் டிருஷ்டர், யார்க் ஆகியோர் பழனி முருகன் கோவிலுக்கு வந்த போது, பழனி ரோப்கார் நிலையத்தை பார்வையிட்டு அது செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தில் பழனி, கொடைக்கானலில் ரோப்கார் நிலையங்கள் அமைய உள்ள பகுதிகளை விரைவில் பார்வையிட உள்ளோம். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம் என்றனர். அவர்களுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சங்கர சுப்பிரமணி, உதவி பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர். பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தில் முதற்கட்டமாக ரோப்கார் நிலையங்கள் அமைக்கப்படும். இதில் பழனி-அஞ்சுவீடு இடையேயும், அஞ்சுவீடு-கொடைக்கானல் குறிஞ்சிஆண்டவர் கோவில் பகுதி இடையேயும் நிலையங்கள் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொறியாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கை அருகே யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவது நிறுத்திவைப்பு
சிபிஎம் - கிராம மக்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் நடவடிக்கை
சிவகங்கை, அக்.13- சிவகங்கை அருகே கூத்தாண்டம் அண்ணாமலை நகர் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடுவ தற்கு கிராம மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது. அண்ணாமலை நகர் ,கொக்கீஸ் நகர் பகுதிகளில் 30 ஏக்கர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடு வதனால் நீர்வள ஆதாரங்கள் பாதிக் கப்படும்; விவசாயம் பாதிக்கப்படும் என்ப தால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு யூக லிப்டஸ் மரக்கன்று நடுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் மரக்கன்று நடுவதற்கு முயற்சித்த னர். இதற்கு கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிவகங்கை தாலுகா அலு வலகத்தில் வட்டாட்சியர் தங்கமணி தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலு வலர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் அந்த இடத்தை குத்தகை கொடுத்தவர்கள் கலந்து கொண்டனர். மரக்கன்று நடு வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் விசுவநாதன், வேங்கையா, சாத் தப்பன், வழக்கறிஞர்கள் ஜேம்ஸ் ராஜா, ராஜீவ் காந்தி ,தர்மராஜ், கிராமத்தின் சார்பில் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் போஸ், குத்தகைக்கு விட்ட மறை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் விசுவநாதன் பேசு கையில், யூகலிப்டஸ் மரக்கன்று நடுவ தால் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும். விவசாயம் பொய்க்கும். ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகும் என்றார். இதன் பின்பு வட்டாட்சியர் தங்கமணி கூறுகையில், இப் பிரச்சனைதொடர்பாக அரசு வழக்கறிஞர், மாவட்ட நிர்வாகம் ஆலோசனை பெற்று முடிவெடுப்பதாகவும் அதுவரை மரக்கன்றுகள் நடுவதற்கு அனு மதிக்கப்பட மாட்டாது என்று கூறினார் .மறை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் களும் இதை பரிசீலிப்பதாக தெரிவித்துச் சென்றனர்.