districts

img

மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வை அரசுகள் கட்டுப்படுத்துக!

மதுரை, செப்.4-  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் மதுரை புறநகர் மாவட்ட 10 ஆவது மாநாடு டி. கல்லுப்பட்டியில் தோழர் ஆர்.சண்முகவள்ளி நினைவரங்கத்தில் (லட்சுமி மஹால்) செப்டம்பர் 4 ஞாயிறன்று நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் செ.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட உதவித்தலை வர் வி.பிச்சைராஜன் கொடியேற்றி னார். வரவேற்புக் குழுத் தலை வர் வி.சமயன் வரவேற்றுப் பேசி னார். மாவட்டத் துணைச் செயலா ளர் பி.பொன்ராஜ் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார்.  மாநாட்டை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம் பேசினார். மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் வேலை- ஸ்தாபன அறிக்கையும் மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி வரவு - செலவு அறிக்கையும் சமர்பித்த னர்.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் வி.உமாமகேஸ்வரன், தமிழ்  நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கே.ராஜேந்தி ரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநிலத் உதவித் தலைவர் பி.சிங்கா ரன் நிறைவுரையாற்றினார். வர வேற்புக்குழுச் செயலாளர் சி.மணி கிருஷ்ணன் நன்றி கூறினார். 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக செ.கண்ணன், மாவட் டச் செயலாளராக கே.அரவிந்தன், மாவட்டப் பொருளாளராக ஜி. கெளரி, மாவட்ட உதவித் தலை வர்களாக பொன் கிருஷ்ணன், வி. பிச்சைராஜன், எம்.செளந்தராஜன், நல்.மூர்த்தி, சி.இந்திரா பி.மகா லெட்சுமி, மாவட்ட உதவிச் செயலா ளர்களாக பி.பொன்ராஜ் ,எஸ்.எம். பாண்டி, என்.காளிராஜன், சி. மணி கிருஷ்ணன், எம்.சித்திரவேலு எம். கண்ணன் 45 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. செஞ்சட்டை பேரணி  மாநாட்டு அரங்கில் இருந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தொழிலாளர்களின் செஞ்சட்டை பேரணி துவங்கியது. பேரணி யினை மாவட்ட உதவித் தலை வர் பொன்.கிருஷ்ணன் துவக்கி  வைத்தார். தேவர் சிலை அருகில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் செ.கண்ணன் முன்னிலை வகித்தார். மாநி லத் உதவித் தலைவர் பி.சிங்கா ரன் உரையாற்றினார். மதுரை  மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி நன்றி கூறினார். பொதுகூட்டத்தில் வன்னிவேலம்பட்டி தமிழன்னை கலைக்குழுவினரின் கோலாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-ஐ திரும்பப்பெற வேண்டும். ஒன்றிய அரசும், மாநில அரசும் மக்களை பெரிதும் பாதிக் கின்ற விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும். ஊராட்சி ஊழியர்களுக்கு மாதம் 5 ஆம் தேதிக்குள் கருவூலம் மூலம் சம்ப ளம் வழங்க வேண்டும். ஒஎச்டி  ஆப்ரேட்டர்களுக்கு பணிக்கொடை, ஒய்வூதியம், காலமுறைஊதியம்  வழங்க வேண்டும். தூய்மை காவ லர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி  ஊராட்சிகள் மூலம் நேரடியாக  சமபளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;