தேனி ,செப்.13- மின்வாரிய ஊழியர்க ளுக்கு 1.12.2019 ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசானது, மின் மின்துறை யை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண் டும். பொதுத் துறையாகவே அதை பாதுகாத்திட வேண் ்டும், தமிழக அரசு உடனடி யாக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி,இராமநா தபுரம், விருதுநகரில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப் பின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாரிய ஆணை எண் 2 ஐ ரத்து செய்ய வேண்டும் .3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் ்பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி திட்டச் செயலாளர் ஏ. தேவராஜ் தலைமை வகித் தார் .சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் கோரிக்கை களை விளக்கி பேசினார்.சிஐடியு மாவட்டச் செயலா ளர் எம்.ராமச்சந்தின் நிறைவு ரையாற்றினார். மாவட்ட நிர் வாகிகள் எம்.கிருஷ்ண மூர்த்தி,எம்.வளர்மதி உள்ளி ட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்
இராமநாதபுரம்
இராமநாதபுரம் கண் காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மாநில நிர்வாகி ஆர் குருவேல், மாவட்டச் செயலாளர் காசிநாதன் மற்றும் எம் மாலா, பரமக்குடி முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.
விருதுநகர்
விருதுநகரில் மேற் பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சௌந்திர பாண்டியன் தலைமை யேற்றார். மாநில துணைத் தலை வர் சந்திரன், இணைச்செய லாளர் வேல்முருகன், ராஜாராம், பாலசுப்ரமணி யம், திட்ட பொருளாளர் சுகு மார் உட்பட பலர் பங்கேற்ற னர்.