districts

img

நெல்லை வண்ணார்பேட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி ,டிச.21- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பாதிக் கப்பட்ட தொழிலாளர்க ளுக்காக போராட்டம் நடத்திய சிஐடியு தலை வர்கள் உள்ளிட்ட தொழி லாளர்களை காவல்துறை  தடியடி நடத்தி கைது செய்து இருக்கிறது .காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்தும் கைது செய்த தொழிற்சங்கத் தலைவர்க ளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தொழிற் சங்கத் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும் சிஐடியு திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பாக  வண்ணாரப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு  மாவட்ட பொரு ளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன்  துவக்கி வைத்தார். போராட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் செண்பகம், சுடலை ராஜ், முருகன்  ,சரவணபெரு மாள், ராஜன், ஜோதி காம ராஜ், பழனி மாரியப்பன்,  குமார் , மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட தலைவர் செமுத்துக்குமாரசாமி முடித்து வைத்து பேசினார். சக்திவேல் நன்றி கூறினார்.

;