districts

img

குமரி மீனவர்களை சுட்டுக்கொன்ற மாலுமிகளுக்கு எதிரான வழக்கு இத்தாலி நீதிமன்றத்தில் தள்ளுபடி

நாகர்கோவில், பிப். 3- கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற இத்தாலி மாலுமிகளுக்கு எதிராக தொட ரப்பட்ட வழக்கை இத்தாலி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே, இந்திய கடல் எல்லைக்குட்பட்ட அரபிக்கடல் பகுதியில், கடந்த 2012 பிப்ரவரி 15 அன்று கன்னி யாகுமரி மாவட்ட மீனவர் பிரடி என்பவ ருக்குச் சொந்தமான செயின்ட் ஆண்டனி  விசைப்படகில் 11 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில், `என்ரிகா லாக்ஸி’ என்ற இத்தாலி நாட்டு எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்த பாது காப்புப் படையினர், மீன்பிடிப் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், கன்னியாகுமரி மாவட்டம் இரையு மன்துறையைச் சேர்ந்த அஜீஸ்பிங்க், கேர ளாவில் வசித்துவந்த குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச்  சேர்ந்த ஜெலஸ்டின்  ஆகிய இருவரும் மரணம டைந்தனர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில், படகில் இருந்த ஒன்பது மீனவர்கள் காய மடைந்தனர். இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதி யில், கரையிலிருந்து 22 கடல் மைல் தூரத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததால், இந்திய கடலோரக் காவல் படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தது. மேலும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலி கப்பலின் மாலுமிக ளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல் வடோர் கிரோனே ஆகியோர் மீது, கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடலோர காவல் குழுமத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப் பட்டனர்.  அவர்களிடம் கொச்சியில் வைத்து விசாரணை நடைபெற்றது. 2013 இல் தேசிய குற்றப்புலனாய்வு முகமையும் (என்ஐஏ) வழக்கு பதிவு செய்தது. இந்தியாவின் கடல் எல்லை 21 கடல் மைல் மட்டும்தான்.

ஆகவே, இந்த துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்க  இந்தியாவுக்கு அதிகாரமில்லை என கேரள உயர் நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனுத்தாக்கல் செய்தது. இந்தியா வின் கடல் எல்லை 200 கடல்மைல் வரை உள்ளது என்று கூறி இத்தாலியின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின், இத்தாலி அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடை பெற்றுக் கொண்டிருந்தபோதே, இத்தாலி அரசு நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடி, இந்த துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்க இந்தி யாவுக்கு அதிகாரம் இல்லை, அவர்களது கடல் இல்லை 21 கடல் மைல் மட்டுமே என்று வாதிட்டது. இந்திய அரசு, 200 கடல் மைல்  வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல்பகுதி. ஆகவே, இவ்வழக்கை விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என வாதிட்டது. இதையடுத்து, சர்வதேச நீதிமன்றம் 200 நாட்டிக்கல் மைல் வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல்பகுதி என உறுதி செய்ததுடன், இந்தியாவின் கடலுக் குள் நுழைந்து இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது குற்றம் எனவும் தீர்ப்பளித்தது. அதேநேரம், இத்தாலி மாலு மிகளுக்குத் தண்டனை விதிக்க முடியாது எனவும் சர்வதேச நீதிமன்றம் கூறியது. கொல்லப்பட்ட மீனவர்களுக்கும் காயம் பட்ட மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை இந்திய அரசு, இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேவைப்பட்டால் ஒரு வருடத்துக்குள் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடி னால், இத்தாலி அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்படும் அல்லது வழக்கு முடிந்ததாகக் கருதப்படும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி 10 கோடி ரூபாயை கேரள உயர்நீதிமன்றத்தில் இத்தாலி அரசு செலுத்தியது. துப்பாக்கி சூட்டில் காயம்பட்ட 9 மீனவர்களும் கடல் தொழிலை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட நிலை யில், அவர்களுக்கும் இழப்பீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் உள்ளது. 2020 மே 21, தேதியிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இத்தாலி குடியரசு இந்த குற்ற வியல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கியது. மேலும் அந்த விசாரணை யைப் பின்தொடர ஒன்றிய அரசு, இத்தாலி  குடியரசு மற்றும் கேரள மாநிலம் ஒருவருக் கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டி ருந்தது. இந்நிலையில் மாலுமிகள் மீது வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ரோம் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத் தீர்ப்பை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் லோரென்சோ குரேரோ வரவேற்றார், இது  பல வருட சட்டப் போராட்டங்களை முடிவு க்கு கொண்டுவந்துள்ளது என்று கூறினார்.  இத்தாலி ரூ.10 கோடி இழப்பீடு வழங்கியதை யடுத்து, இந்தியாவில் அவர்கள் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த மே  மாதம் முடித்து வைத்தது. சுட்டு கொல்லப் பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதி கிடைப் பதில் ஒன்றிய அரசு போதிய அக்கறை செலுத் தாததே இந்த முடிவுகளுக்கு காரணம். பாதிக்கப்பட்ட 9 மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து போராட உள்ளதாக தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் தெிவித்தார்.