districts

மதுரை முக்கிய செய்திகள்

டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக மாவட்ட செயலாளர் கைது

விருதுநகர், அக்.8- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் டிராக்ட ரின் பின் பாகமான டிரைலரை திருடிய பாஜக அமைப்பு  சாரா தொழிலாளர்கள் நல மாவட்டச் செயலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். திருவில்லிபுத்தூர்-இராஜபாளையம் சாலையில் உள்ள திருப்பாற்கடல் கண்மாயில் நடைபாதை அமைக்  கும் பணி நடைபெற்று வருகிறது. இராஜபாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் மூலம் இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் பாதையில் மண் அடிக்கும் பணியை கணேசன் என்பவர் டிராக்டர் மூலம் செய்து வந்தார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் 22 அன்று பணிகளை  முடித்து விட்டு, டிராக்டர் மற்றும் அதன் மற்றொரு பாக மான டிரைலரையும் தனித் தனியாக நிறுத்தி விட்டு கணே சன் சென்றுள்ளார். மறுநாள் திரும்பி வந்து பார்த்த போது டிரைலரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியைடந்த கணேசன் திருவில்லி புத்துர் நகர காவல் நிலையதில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வந்தனர். முடிவில், கடம்பன்குளத்தைச் சேர்ந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் நல மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சேர்ந்து டிரை லரை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ் மோதி பால்வியாபாரி பலி

இராஜபாளையம், அக்.8-  இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த நல்லமங்களத்தைச் சேர்ந்தவர் தர்மர் (51). பால் வியாபாரியான இவர் , இராஜபாளையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார், அப்போது தென்காசி சாலை தளவாய்புரம் விலக்கில் வரும் போது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதியது.  பலத்த காயமடைந்த தர்மரை அதே ஆம்பு லன்ஸில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர், ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து சேத்தூர் புறக்காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தர்ம லிங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் சந்தையில்  நாட்டு மல்லி விலை கடும் உயர்வு

விருதுநகர், அக்.8- விருதுநகர் சந்தையில் நாட்டு மல்லி யின் விலையானது கடுமையாக உயர்ந்து  வருகிறது. 40 கிலோவிற்கு ரூ.1000 வரை  உயர்ந்ததால், நுகர்வோர் அதிர்ச்சிய டைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. இதில் இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அதிகமாக லயன் மல்லி இறக்கு மதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக  மல்லியின் விலையானது சற்று குறைந் துள்ளது. லயன் மல்லி விலை குறைவு  கடந்த வாரம் 40 கிலோ லயன் வகை மல்லியின் விலை ரூ.5150 முதல் 5300 வரை  விற்பனை செய்யப்பட்டு வந்தது. வரத்து அதிகரித்ததால் இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.250 குறைந்து தற்போது ரூ.4900  முதல் 5100 வரை விற்பனை செய்யப்படு கிறது. நாட்டு மல்லி ரூ.1000 உயர்வு  அதேவேளை நாட்டு மல்லியின் விலை யானது கடந்த வாரத்தை விட ரூ.1000 வரை  உயர்ந்தள்ளது. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு போதிய விளைச்சல் இல்லாத காரணத்தால், நாட்டு மல்லியின் விலை யானது கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 40 கிலோ ரூ. 5ஆயிரம் முதல் 5500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை யில், இந்த வாரம் திடீரென மூட்டை ஒன் றுக்கு ரூ.1000 உயர்த்தப்பட்டு ரூ.6000 முதல்  ரூ.6500வரை விற்பனையாகிறது. இதனால்,  நுகர்வோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள னர். தொடர் சரிவில் பாமாயில்  இந்தியாவில் பாமாயில் தொடர்ந்து அதிக அளவில் வெளி நாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்டு வருவதால் அதன் விலையும் வாரந்தோறும் குறைந்து வரு கிறது. அந்தவகையில், கடந்த வாரம் 15 கிலோ  பாமாயில் ரூ.1500க்கு விற்கப்பட்டு வந்த  நிலையில், இந்த வாரம் ரூ.65 குறைந்துள் ளது. எனவே, தற்போது பாமாயில் ரூ. 1435க்கு விற்கப்படுகிறது. அதேவேளை பிற உணவுப் பொருட்க ளான கடலை எண்ணெய், நல்லெண்ணெய், வத்தல், பருப்பு வகைகளின் விலையில் எவ்  வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, கடந்த வாரம் விற்கப்பட்டு வந்த அதே விலைக்கு அப்பொருட்கள் விற்பனை செய்  யப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால்  58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

விவசாயிகள்  கடும் ஏமாற்றம்

தேனி, அக்.8- வைகை அணையில் நீர்மட்டம் சரிந்து  விட்டதால் திறக்கப்பட்ட 11 நாளில் 58 ஆம்  கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட தால் தேனி, திண்டுக்கல், மதுரை விவசாயி கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். வைகை அணை தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த ஜூன் முழுக்கொள்  ளளவை எட்டியது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும்  நிரம்பிய வைகை அணையில் இருந்து ஒரு  மாதத்திற்கும் மேலாக ஆற்றில் உபரியாக  தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் களை நிரப்பும் வகையில் 58 ஆம் கால்வா யில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயி களும் பொதுமக்களும் கடந்த 2 மாதங்க ளாக கோரிக்கை விடுத்தனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 67அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே 58 ஆம்  கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்ப தால் வைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவாக இருக்கும் போதே தண்ணீர் திறக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை  விடுத்தனர். ஆனால் தண்ணீரை ஆற்றில் உபரியாக திறக்கும் போதெல்லாம் 58 ஆம்  கால்வாயில் தண்ணீர் திறக்காமல் மிகவும் தாமதமாக கடந்த மாதம் 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மதுரை, திண்டுக்கல், சிவ கங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை  அணையில் இருந்து பாசன கால்வாய் வழி யாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில், அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரியத் தொடங்கியது.  சனிக்கிழமை காலை வைகை அணை  நீர்மட்டம் 67.49 அடியாக சரிந்த நிலையில் 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடி யாத நிலை ஏற்பட்டது. இதனால் 58 ஆம்  கால்வாய் மூடப்பட்டது. வெறும் 11 நாட்கள்  மட்டுமே மிகவும் குறைந்த அளவில் திறக்  கப்பட்ட தண்ணீர் உசிலம்பட்டி பகுதிக்கு போய்ச் சேரும் முன்பாகவே அணையின் மதகுகள் மூடப்பட்டதால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாஜகவின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்படக்கூடாது  தேனியில் துரை வைகோ பேட்டி

தேனி, அக்.8- பாஜகவின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்பட கூடாது என  மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார் . தேனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை  வரலாற்று ஆவணப் படமான “மாமனிதன் வைகோ” படம் திரை யிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் துரை வைகோ  கூறுகையில், திருக்குறள் குறித்து தமிழக ஆளுநரின் பேச்சு குறித்த  செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக ஆளுநர்  பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார். திருவள்ளு வரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவருக்கு காவி நிறம் பூசுவது, ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைப்பது ஏற்புடை யதல்ல. ஆளுநர், ஆளுநராக செயல்படாமல் அரசியல் செய்து வரு கிறார். இனியும் பாஜகவின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்படக்கூடாது. தமிழ் இனத்திற்கே பெருமை தரக்கூடிய மன்னர்தான் ராஜராஜ சோழன். தென்கிழக்கு ஆசியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வர். அவரையும் திருவள்ளுவரைப் போல் மதத்திற்குள் அடக்குவது மலி வான அரசியல் என்றார்.

போதை கடத்தலுக்கு எதிராக இரு மாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு

தேனி, அக்.8- போதை கடத்தலுக்கு எதி ராக தமிழக, கேரள போலீ சார் இணைந்து செயல்படு வது என்று குமுளியில் நடை பெற்ற தேனி, இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் முடிவுசெய்துள்ளனர்.  போதைக்கு எதிராக கேரளா போலீசார் தீவிர மாக செயல்பட்டு வருகின்ற னர். இதில் கேரள காவல்  துறையின் யோதவ் திட்டத்  தின் ஒரு பகுதியாக குமுளி யில் கஞ்சா மற்றும் போதை தடுப்பு சம்பந்தமாக தேனி மற்றும் இடுக்கி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோச னைக்கூட்டம் குமுளி வனத்  துறை அலுவலகத்தில் ந நடைபெற்றது. கூட்டத்தில் தேனி எஸ்.பி.,பிரவீன் டோங்கரே, இடுக்கி எஸ்.பி., குரியாகோஸ், உத்தம பாளையம் ஏஎஸ்பி., ஸ்ரேயா  குப்தா, தமிழ்நாடு மது விலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுரேஷ், பீர்மேடு டிஎஸ்பி ஜே.குரியாகோஸ், இடுக்கி தனிப்பிரிவு டிஎஸ்பி பியூஸ்ஜார்ஜ், போதைப் பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மேத்யூஜோர்ஜ் மற்றும் வனத்துறையினர் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆலோசனைக் கூட்டத் தில், எல்லை வழியாக கஞ்சா கடத்தப்படுவது குறித்து முக்கிய விவாதம் நடந்தது. கேரளாவில் பிடிபட்ட கஞ்சா தமிழகத்தில் இருந்து வாங்  கப்பட்டது என்பது தெளி வாகத் தெரிந்தாலும், அதை  விற்றவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே கேரளாவில் பதிவு செய்யப்படும் இதுபோன்ற வழக்குகளின் தகவல்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்து விற்பனை யாளர்களை கைது செய்வ தற்கான முயற்சிகளை தொடங்கவும், போதை கடத்தலுக்கு எதிராக இரு மாநில போலீசார் இணைந்து செயல்படவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கேரளாவுக்கு வரும் சரக்கு வாகனங்க ளில் சோதனை கடுமை யாக்கப்படும். கஞ்சா விற் பனை செய்யப்படுவதாக சந்தேகப்படும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். கேரளாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படும் இடங்களிலும் கண்காணிப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக மப்டியில் போலீஸ் குழுவை நியமிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

 

 

;