districts

மதுரை முக்கிய செய்திகள்

மேகமலை அருவியில்  குளிக்கத் தடை

கடமலைக்குண்டு, ஆக.20- தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோம்பைத்  தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மேகமலை வனப்பகுதியில் மழை  இல்லை. அதன் காரணமாக அருவியில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தொடர்  வெயில் தாக்கம் காரணமாக சனிக்கிழமை மேகமலை அருவி முற்றிலுமாக வறண்டு போனது. தற்போது அருவி யின் மேல் பகுதியில் மட்டும் லேசான அளவில் நீர்வரத்து  உள்ளது. அந்த இடத்தில் இருந்து மேகமலை, குமணன்  தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த 52 கிராமங்க ளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.  எனவே அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேல்  பகுதிக்கு சென்று குடிநீரை மாசுபடுத்தும் அபாயம் நிலவி யது. இதையடுத்து நீர்வரத்து ஏற்படும் வரை அருவிக்கு  சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்க வேண்டும் என  கோம்பைத்தொழு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்‌.  இதையடுத்து வனத்துறையினர் அருவி அருகே சோத னைச் சாவடியில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் பணி களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஞாயிற்றுக்கிழமை விடு முறை தினம் என்பதால் அருவிக்கு ஏராளமான சுற்றுலா  பயணிகள் வருகை புரிந்தனர். ஆனால் வனத்துறையினர்  அனுமதி இல்லாததால் குளிக்க முடியாமல் ஏமாற்றத்து டன் திரும்பிச்சென்றனர்.

மதுரை மண்டலம் 2-இல்  நாளை மக்கள் குறைதீர் முகாம் 

மதுரை, ஆக.20-  மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.  மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வ தற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை யன்று வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.  ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமையனறு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30  வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்தி ராணி தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 2 (வடக்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: (வார்டு எண்.1 விளாங்குடி, வார்டு எண்.2 கரிசல்குளம், வார்டு எண்.15  ஜவஹர்புரம், வார்டு எண்.20 விசாலாட்சி நகர், வார்டு எண்.21 அருள்தாஸ்புரம், வார்டு எண்.22 தத்தனேரி மெயின் ரோடு, வார்டு எண்.23 அய்யனார் கோவில், வார்டு  எண்.24 மீனாட்சிபுரம், வார்டு எண்.25 பீ.பீ.குளம், வார்டு  எண்.26 நரிமேடு, வார்டு எண்.27 அகிம்சாபுரம், வார்டு  எண்.28 கோரிப்பாளையம், வார்டு எண்.31 தல்லாகுளம், வார்டு எண்.32 சின்னசொக்கிக்குளம், வார்டு எண்.33 கே.கே.நகர், வார்டு எண்.34 அண்ணா நகர், வார்டு எண்.35  சாத்தமங்கலம், வார்டு எண்.63 பாத்திமா நகர், வார்டு எண்.64 பெத்தானியாபுரம், வார்டு எண்.65 பி.பி.சாவடி,  வார்டு எண்.66 கோச்சடை ஆகிய வார்டு பகுதிகளை சேர்த்து பொதுமக்கள் தங்களுடைய பகுதி அடிப்படை பிரச்சனைகளுக்கான கோரிக்கை மனுக்களை கொடுத்து  பயன் பெறுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முன்னாள் ராணுவ வீரர் கைது

சாத்தூர், ஆக.20- சாத்தூர் அருகே 10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்தவர் 10 வயதுடைய சிறுமி. இவர் அதே  பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து  வருகிறார். பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்த  சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஆசை பாண்டி(68), சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி  ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி அழுதுக் கொண்டே தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அம்மாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசைபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

ஆக.,31 வரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர வாய்ப்பு

விருதுநகர், ஆக.20-  விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் ஆகஸ்ட் 31வரை நடைபெற உள்ளது. எனவே, 10ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்ந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்  தொழிற்துறை எந்திரனியல் மற்றும்  எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவிய லாளர் மேம்படுத்தப்பட்ட இயந்திர தொழில்நுட்பவியலாளர், தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு, மேலாண்மை உட்புற வடிவ மைப்பு மற்றும் அலங்காரம் இயந்திர வேலையாள், பொருத்துநர் போன்ற தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர்ந்து பயிற்சி பெறும் தகுதி யுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை மற்றும் மாதாந்திர கல்வி உதவித் தொகை  ரூ.750- சீருடை 2 செட் மற்றும் மூடு காலணி  1 செட், பாடப்புத்தகங்கள் மற்றும் வரை பட கருவிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு  வரை அரசு பள்ளியில் பயின்ற பெண் களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ்; மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்.  எனவே, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியு டைய பிளஸ்-1, பிளஸ்-2/ பட்டய / பட்டப்  படிப்பு தேர்ச்சி பெற்ற / தோல்வியடைந்த / இடைநின்ற மாணவ /மாணவியர் தொழிற்கல்வியினை பயில விண்ணப்பிக்க லாம் என அரசு ஐ.டி.ஐ நிர்வாகம் அறி வித்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்.ஆக.20-  திண்டுக்கல் எம்.வி.எம். அரசு பெண்கள் கல்லூரி யில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த  தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.  வேலைவாய்ப்பு முகாமை திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வைத்தார். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல்  பட்டதாரிகள், பொறியாளர்கள், வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் 120க்கும்  மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. தங்கள்  நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுத்  தனர். முகாமில் பங்கேற்று வேலை பெற்ற பெண்கள்  மகிழ்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதல மைச்சருக்கும். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர். 

ஆடலூரில் யானைகள்  நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

திண்டுக்கல், ஆக.20- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளான ஆடலூர் பகுதியில் தற்போது இரவு  நேரங்களில் 2 யானைகளின் தொல்லை அதிகரித்து உள்ளது. கடந்த சில தினங்களாக ஆடலூர் அருகே குப்பம்மாபட்டி மெயின்ரோடு, சோலைக்காடு, கே.சி.பட்டி பகுதிகளில் இரட்டை யானைகள் வலம் வரு கின்றன. இதன் காரணமாக மக்கள் மாலை 3 மணிக்கே  வீடுகளுக்கு வந்துவிடுகிறார்கள். பிற்பகல் 3 மணி அள வில் யானைகள் சாலையில் நடமாடத் தொடங்கிவிடு கிறது. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் வனத்துறை அதி காரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இரவு நேரத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசும் வனத்துறை அதிகாரிகளும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

மின்சாரம் தாக்கிய கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி பலி

சின்னாளபட்டி,ஆக.20- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட 10 ஆவது வார்டு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(38), கட்டிடத் தொழி லாளி, இவரது மனைவி உதயசூரியா (34). பெட்ரோல் பங்கில் வேலை செய்து  வந்தார். இவர்களுக்கு மகன்,மகள் உள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று காலை அவர்கள் கட்டி வரும் புதிய வீட்டின் சுவருக்கு தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த பாண்டியின் மீது  எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அலறினார். இதனை கண்ட மனைவி  உதயசூரியா கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் உதயசூரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய பாண்டியை மீட்ட அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேசிய யோகாசன போட்டி திண்டுக்கல்லில் இருந்து  35 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

திண்டுக்கல், ஆக.20- தென்காசியில் நடை பெறும் தேசிய யோகாசன போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் தேர்வு திண்டுக்கல் உள்  விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. 700-க்கும்  மேற்பட்ட வீரர் வீராங்கனை கள் பங்கேற்றனர்.  தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் வரு கிற செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தென்காசியில் நடைபெறுகிறது. இதனை யொட்டி திண்டுக்கல்லில் திண்டுக்கல் மாவட்ட யோகா சன சங்கம் சார்பாக திண்டுக்  கல் மாவட்ட உள் விளை யாட்டு அரங்கில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பங்  கேற்கும் வீரர் வீராங்கனை கள் தேர்வு நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஆசா னம், ஆர்டிஸ்டிக், ஆர்டிஸ்  டிக் ஃபேர். ரிதமிக், பிரி பிளோ, ஆகிய யோகாசன போட்டிகள் வயதின் அடிப்ப டையில் 10 முதல் 12 வயது,  12 முதல் 14 வயது. 14 முதல்  16 வயது மற்றும் 16 வய துக்கு மேல் உள்ளவர் களுக்கு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் 35 வீரர்,  வீராங்கனைகள் திண்டுக்கல்  லில் இருந்து தேர்வு செய் யப்பட்டு தென்காசியில் நடைபெறும் தேசிய அள விலான போட்டிகளில் பங் கேற்க உள்ளனர்.