districts

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

 1. சோனியா காந்தி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் அவரை கட்டாயம் சந்திப்பேன். தேவைப்பட்டால் நாங்கள் (எதிர்க்கட்சி தலைவர்கள்) மீண்டும் சந்திப்போம். அனை வரின் அணுகுமுறையும் நேர்மறையாக இருந்தது. நாங்கள் முக்கிய முன்னணியாக இருக்க விரும்புகிறோம்; மூன்றாவது முன்னணி அல்ல. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி யை தொடருவேன் என  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
 2. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள பூ  வியாபாரிகள் கன்னியா குமரி மாவட்டம் தோவாளை சந்தையில் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கி சென்ற னர். செவ்வாயன்று இரவு முதல் புதனன்று மதியம் 12 மணி வரை  500 டன் பூக்கள் விற்பனை யானது. சுமார் 4 வருடத்தி ற்கு பிறகு நல்ல வியா பாரம் என தோவாளை வியாபாரிகள் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துள்ளனர்.
 3. இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூளைச் சாவு அடைந்த வேலூர் மாவட்டம் கொசவன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சுதீஷின் (11) இதயம், கல்லீரல், கிட்னி, கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 4. அறந்தாங்கி வீரமாகாளி யம்மன் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு புதுக்கோ ட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழ னன்று உள்ளூர் விடு முறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு.
 5. செங்கல்பட்டு மாவட்டத் திற்கு ஓணம் பண்டிகை யையொட்டி எவ்வித விடுமுறை அறிவிப்பும் வெளியிடவில்லை என  மாவட்ட ஆட்சியர் அறி விப்பு.
 6. ஆந்திர மாநிலம் காக்கி நாடா வலசப்பாக்கம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையில் விஷவாயு சேர்ந்து பரவியது. அரு கில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி  6,7,8-ஆம் வகுப்பில் இருந்த 18 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். 
 7. தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் 100% இடங்களை மெரிட் மற்றும் சமூக ஒதுக்கீடு களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும்போது, ஏற்கனவே 30 சதவிகிதம் அல்லது அதற்கு மேலோ பெண்கள் இருந்து விட்டால், தனியாக 30% ஒதுக்க அவசியமில்லை; 30 சதவிகிதத்திற்கும் கீழ், பெண்களின் பிரதி நிதித்துவம் இருக்கும் பட்சத்தில் 30% ஒதுக் கீட்டை அடிப்படையாகக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
 8. தென் அமெரிக்கப் பொதுச் சந்தையில்(மெர்கோசர்) பொலிவியாவை இணைத்துக் கொள்வதற்கு தனது முழு ஆதரவு உண்டு என்று பிரேசில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக இருக்கும் லூலா டி சில்வா உறுதியளித்துள்ளார். பிரேசில் நகரமான சாவ் பாலோவில் பொலிவியாவின் ஜனாதிபதியான லூயிஸ் அர்சைச் சந்தித்துப் பேசிய பிறகுதான் இதை லூலா தெரிவித்தார். பத்தாண்டுகளுக்கு முன்பே மெர்கோசரில் இணைய பொலிவியா விருப்பம் தெரிவித்திருந்தாலும், பிரேசில் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்காததால் இணைய முடியவில்லை.
 9. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டின் கோடைக்காலம்தான். ஹங்கேரியில் கடுமையான வெப்பம் நிலவியது. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களின் சராசரி வெப்பம் 22.8 டிகிரி செல்சியசாக இருந்திருக்கிறது. 1991 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலான கோடைக்காலங்களின் சராசரி வெப்பம் 20.8 டிகிரி செல்சியசாக இருந்தது. அதோடு ஒப்பிடுகையில் தற்போது 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டில்தான் கடுமையான வெப்பம் இருந்தது. தற்போது அதைவிட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக தகிக்கிறது.
 10. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் கும்பல் வன்முறை பெரும் அளவில் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரையில் 48 பேர் துப்பாக்கிகளைக் கொண்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் கும்பல் துப்பாக்கிச்சூடுகளின் எண்ணிக்கை பெருகியுள்ளன. போர் நடப்பதைப் போன்று இந்த வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. ஏகே47 ரகத் துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன என்று காவல்துறையினர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
 11.  

 

;