districts

img

ஏப்.12 மதுரையில் து.ராஜா பிரச்சாரம்

சென்னை, ஏப்.7- தமிழகத்தில், மக்க ளவைத் தேர்தலில் போட்டியிடும் ‘இந்  தியா’ கூட்டணி வேட்  பாளர்களை ஆத ரித்து இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா ஏப்ரல் 8 முதல் 12 வரை தேர்தல் பரப்புரை  மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 8 திங்களன்று காலை சென்னை யில் பிரச்சாரத்தைத் துவங்கும் அவர்,  மாலை 6 மணிக்கு பெரம்பூர் கண்ண தாசன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9 அன்று விழுப்புரத்தில் காலை  11 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பி லும், மாலை 6 மணிக்கு திருக்கோவிலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 10 அன்று சிதம்பரத்தில் காலை  11 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டம், மாலை 6 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலை  அருகில் பொதுக்கூட்டம், ஏப்ரல் 11 அன்று  நாகப்பட்டினம் தொகுதி திருத்துறைப் பூண்டி, காலை 11 மணி செய்தியாளர்கள்  கூட்டம், மாலை 6 மணி பொதுக்கூட்டம்.

சு.வெங்கடேசன்
ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை மதுரை யில் காலை 11 மணிக்கு செய்தியாளர் களைச் சந்திக்கும் து. ராஜா, மாலை 6 மணிக்கு கோரிப்பாளையம் பள்ளி வாசல் தெருவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்க டேசனுக்கு வாக்குகள் கோரி உரை யாற்றுகிறார்.