districts

ஊரகப் புத்தாக்கத் திட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி, டிச.4- தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் தொழில்சார் சமூக வல்லுநர் பணியிடங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆழ்வார் திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 வட்டா ரங்களில் 105 ஊராட்சிகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.  இந்த வட்டாரங்களில் உள்ள ஊராட்சி களில் நிறுவன செயல்பாடுகளை ஒருங்கி ணைத்தல், தனிநபர், கூட்டு நிறுவனங்களை  வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு ஊராட்சிக்கு ஒரு நபர் வீதம் தொழில்சார் சமூக வல்லுநர் பணிக்கு தகுதியான நபர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய நபர்கள் மகளிர் சுய உதவிக் குழுவை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அதே ஊராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 25லிருந்து 45 வயது உடையவராகவும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக வங்கி யியல், சமூகப்பணி, வணிகவியல், வேளா ண்மை, வணிக நிர்வாகம், கால்நடை அறி வியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்ட்ராய்டு அலைபேசி தொழில் நுட்பம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வாழ்வாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வா கியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் பிரதிநிதியாகவோ இருக்க கூடாது.

இத்தகுதிகளை உடைய நபர்கள் தங்கள் ஊராட்சியில் செயல் பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப் பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்கள் தொடர்பான விபரங்களுக்கு ஆழ்வார்திருநகரி வட்டார அணித் தலைவர் தொலைபேசி எண்-9940737513, கருங்குளம் திட்ட செயலர்-6381625842, சாத்தான்குளம் திட்ட செய லர்-7010072643 மற்றும் தூத்துக்குடி திட்ட செயலர்-9629649337 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.12.2021 மாலை 05.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

;