திருநெல்வேலி, டிச .7- பாளையங்கோட்டையில் சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் நடை பெற்றது கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். செயலாளர் அறிக்கைகளை முருகன், சண்முகராஜா ஆகி யோர் சமர்ப்பித்தனர். பொருளா ளர் அறிக்கைகளை சங்கரநாரா யணன், சுரேஷ்குமார் ஆகியோர் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் ஆண்டு பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு நெல்லை மாவட்ட பொருளாளர் பெருமாள், ரேவா மாவட்ட செயலாளர் வெங்க டாசலம் .சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட பொ துச்செயலாளர் ஜோதி, அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மத்திய சங்க தலைவர் அருண் ,அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கனகராஜ் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை அமல் படுத்த வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்கள் பணி நியமனம் முப்பதாண்டு காலமாக இல்லை.
இது பேருந்துகள் தட முடக்கத்தி ற்கு காரணம் ஆகிறது. எனவே உடனடியாக தொழில்நுட்ப பணி யாளர்களை தமிழக அரசு நியம னம் செய்ய வேண்டும் 2003 க்குப் பின்னர் பணியில் சேர்ந்து இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு பென்ஷன் இல்லாத காரணத்தால் குடும் பத்தை பாதுகாக்க உடனடியாக வாரிசு வேலை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட ர். அதன்படி கிளை 1க்கு தலைவ ராக செல்வராஜ், செயலாளராக ஏ.முருகன், பொருளாளராக சங்கரநாராயணன் மற்றும் 6துணைத் தலைவர்கள்,6 உதவி செயலாளர்கள் உட்பட 23 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப் பட்டது. அதேபோல் கிளை 2க்கு தலைவராக கண்ணன், செயலா ளராக சரவணகுமார். பொருளா ளராக சுரேஷ்குமார் மற்றும் 3 துணை தலைவர்கள் 3 உதவி செயலாளர்கள் உட்பட 14 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.