districts

சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் மேம்பாலப் பணிகள் துவங்க 2818 ச.மீ நிலம் கையகம்

விருதுநகர், ஜூலை 8- சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலை யில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக 2818 சதுரமீட்டர் நிலம் கைய கப்படுத்தப்பட உள்ளது. இதற்கென தமி ழக அரசு ரூ.5கோடியே 60 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழக நிதி-மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிததுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதா வது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி -திரு வில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் இரயில்வே கடவு எண்- 427-ல் அமைந் துள்ள இரயில்வே கேட் மூடப்படும் போது  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே, இங்கு மேம்பாலம் கட்ட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதனடிப்படையில், அங்கு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு  அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. சாலை மேம்பாலம் மற்றும் அணுகு சாலை  அமைப்பதற்காக சிவகாசி மற்றும் ஆனை யூர் கிராமங்களில் 2818 ச.மீ. நிலங்களை கையகப்படுத்தும் பணியானது வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறு திக்கட்டத்தை எட்டியுள்ளது. நிலம் மற்றும்  கட்டுமானங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையாக ரூ.5கோடியே 60 இலட்சம் வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி யுள்ளது. நில உடைமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையானது இம்மாத இறு திக்குள் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

;