districts

img

உள்ளாட்சி தேர்தலில் பாஜக -அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்

தேனி, பிப்.16- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக, அதிமுகவிற்கு தக்க படம் புகட்ட வேண்டும், மக்களின் அடிப் படை தேவைகளை மன்றத்தில் எடுத்து ரைக்க, ஊழலற்ற உள்ளாட்சி நிர்வா கம் செம்மையாக நடைபெற மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான ஏ.லாசர் வேண்டுகோள் விடுத் துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியகுளம் நகராட்சி 13 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடும் எம்.மதன்குமார், தென்கரை பேரூராட்சி 1 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ச.செளந்திர பாண்டி, தாமரைக்குளம் பேரூராட்சி 7 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடும் ஆர்.சாந்தி மற்றும் வடுகபட்டி யில் 5 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.கணேசன், 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடும் உமா மகேஸ்வரி ஆகியோரை ஆதரித்து புதனன்று ஏ.லாசர் பிரச்சா ரம் செய்தார்.  

அப்போது அவர் பேசியதாவது: நான் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது இந்த  பகுதிகளில் மருத்துவமனை விரிவாக் கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏராளமான நிதியை ஒதுக்கினேன். ஒப்பந்தத்தாரிடம் ஒரு ரூபாய் கூட நிதி பெற்றது கிடையாது, அதே போல பெரியகுளம் நகராட்சியில் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஏ.ரஜாக், அவரது மனைவி ஆகியோர் பெரியகுளம் நகர் மன்ற உறுப்பினராக இருந்து பெரிய குளம் நகரின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.  அவர்கள் போல் உள்ளாட்சி மன்றத்தில் மக்களின் குரலை ஒலிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தி யிருந்த வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். ஊழல் இல்லாத நிர்வா கத்தை உருவாக்க பெரும் உதவியாக இருக்கும். தோல்வி பயத்தில் கொரோ னாவை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுகவால் முடிய வில்லை. பெரும்பாலான அமைச்சர் கள் ஊழல் வழக்கில் சிக்கி தவிக் கின்றனர்.  தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக, தனித்து போட்டியிடு வதாக அறிவித்து கார்ப்பரேட் கம் பெனிகளை வழங்கிய பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். திமுக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும்  திமுக கூட்டணி வெற்றி பெற வேண் டும். இவ்வாறு அவர் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன், சு.வெண்மணி, தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், திமுக கிளை செய லாளர் மாரியம்மாள், திமுக பொறுப் பாளர் அந்தோணி, விடுதலை சிறுத் தைகள் கட்சி நிர்வாகி கருப்பணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.