ஈரோடு, ஜன.28- சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்து நாயை துரத்திய சிறுத்தையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி கல் உடைக்கும் கிரசர் இயங்கி வரு கிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கிரசர் பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் வெள்ளியன்று இரவு 9.45 மணிய ளவில் கிரசர் பகுதியில் ஒரு நாய் காவலுக்கு படுத்தி ருந்தது. அப்போது நாயை பிடிப்பதற்காக சிறுத்தை துரத்தியது. சிறுத்தையை கண்ட நாய் வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பியது. சிறுத்தை நாயை துரத்திய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்நிலையில் அங்கு இருந்தவர்கள் சிறுத்தை நாய் துரத்தி யதை கண்டு அச்சமடைந்தனர். சிறுத்தை நாயை துரத்தும் காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளாமுண்டி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.