districts

img

நுண்ணீர் பாசனத் திட்டம் தேனியில் 2,768 விவசாயிகளுக்கு ரூ.19 கோடி மானியம் வழங்கல்

தேனி, மே 31- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை ஆகிய துறைகளின் மூலம் நுண்ணீர் பாசன  திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானி யமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கி யும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் குழாய் கிணறு- ஆழ்துணை கிணறு, டீசல் பம்ப் செட், மின் மோட் டார்கள், நீர் கடத்தும் குழாய் மற்றும் நீர் தேக்க தொட்டிகள் அமைத்திட 50 சதவீத மானியத்தில் வேளாண் சார்ந்த பொருட்களை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் வர லாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறார்கள்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம், தேனி, ஆண்டி பட்டி, சின்னமனூர், போடிநாயக்கனூர், க.மயிலாடும் பாறை, உத்தமபாளையம் மற்றும் கம்பம் ஆகிய  அனைத்து 8 வட்டாரங்களிலும் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-22-ஆம்  நிதியாண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் சார்பில் 1,069 விவசாயிகளுக்கு ரூ.369.17 இலட்சம் மானியத் தொகையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில்  1,069 விவசாயிகளுக்கு ரூ.1455 லட்சம் மானியத் தொகை யும், என மொத்தம் 2,138 விவசாயிகளுக்கு ரூ.1824.17 லட்சம் மானியத் தொகையும், துணை நீர் மேலாண்மை திட்டத் தின்கீழ் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 358 விவசாயிகளுக்கு ரூ.27.20 இலட்சம் மானியத் தொகையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 272 விவசாயிகளுக்கு ரூ.58.07 இலட்சம் மானியத் தொகை யும் என மொத்தம் 630 விவசாயிகளுக்கு ரூ.85.27 லட்சம்  மானியத் தொகையும் ஆக மொத்தம் 2,768 விவசாயி களுக்கு ரூ.1,909.44 இலட்சம் மானியத்தொகை வழங்கப்  பட்டுள்ளது.  இத்தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலு வலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.