மதுரை, பிப்.5- மதுரையில் உள்ள 100 மாநக ராட்சி வார்டுகளுக்கு 1,122 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மிகக்குறைந்த அளவாக வார்டு எண் 32-இல் ஏழு பேர் மனுத்தாக் கல் செய்துள்ளனர். இவர்களில் திமுக, அதிமுக சார்பில் தலா ஒருவர் மாற்று வேட்பாளர்கள். இவர்கள் இருவரும் மனுவைத் திரும்பப்பெற்றால் களத்தில் ஐந்து பேர் மட்டுமே போட்டியிலி ருப்பர். அதிகபட்சமாக வார்டு எண் 7-இல் 18 பேர் மனுத்தாக்கல் செய் துள்ளனர். வார்டு எண் 96-இல் மொத்தம் 11 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள னர். இங்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக மாற்று வேட்பாளர்கள் மனுக் களை திரும்பப்பெறும் பட்சத்தில் எட்டு பேர் களத்தில் இருப்பர். இங்கு ஒரு சுயேட்சை கூட மனுத் தாக்கல் செய்யவில்லை. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.விஜயா, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் கட்சி யின் வேட்பாளர்களை களத்தில் சந்திக்கிறார். நகராட்சிகள் நகராட்சிகளைப் பொறுத்த மட்டில் உசிலம்பட்டி-163 பேர், திருமங்கலம்-147 மேலூர்-172 பேர் என மொத்தம் 482 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். திருமங்கலம் 14-ஆவது வார்டில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் அதிமுக, பாஜக வேட்பாளர் களை களத்தில் சந்திக்கிறார். இங்கு அதிமுக வேட்பாளர் உட் பட மொத்தம் நான்கு பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். பேரூராட்சிகள் பேரூராட்சிகளைப் பொறுத்த மட்டில் டி.கல்லுப்பட்டி-77, ஏ. வெள்ளாளபட்டி 78 சோழவந் தான்-98, பேரையூர்-98, எழு மலை-88, பாலமேடு-54, பரவை- 83, வாடிப்பட்டி-91, அலங்கா நல்லூர்-76 பேர் என மொத்தம் 743 பேர் மனுத்தாக்கல் செய் துள்ளனர். பரவை பேரூராட்சி 14-ஆவது வார்டில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 6 பேரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் சந்திக்கிறது. சோழவந்தான் பேரூராட்சி 12-ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, அம முக, நாம்தமிழர் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சை வேட்பாளர் கள் என ஆறு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். டி.கல்லுபட்டி பேரூராட்சி 4-ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக, பாஜக, அமமுக உட்பட மொத்தம் நான்கு பேர் மனுத்தாக்கல் செய் துள்ளனர்.