திருப்பூர், ஜன.6- தேர்தல் பணியாளர்களுக்கு மின் னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயலாளர் எம்.ரவி கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புதனன்று வாக்காளர் பட்டி யல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்களார் பட்டியலை அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்நிகழ்வில் பங் கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரவி பேசுகை யில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள் ளப்படவில்லை. எனவே தவறுகளை சரி செய்ய வேண்டும். மேலும் தற்போ தைய சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந் தவுடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மின் னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கையாளுவது குறித்து தேர்தல் பணி யாளர்களுக்கு பயிற்சியை தொடங்க வேண்டும். ஏற்கனவே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் முறையில் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களை கையாளுவதில் வேறுபாடு இருக்கும். கடந்த காலத்தில் இதில் குளறுபடிகள் இருந்தன. எனவே மின் னணு எந்திரங்கள் கையாளுவது குறித்து அலுவலர்களுக்கு உடனடி யாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல், தற்போது 1100 பேர் மற்றும் 1200 பேர் என்ற அடிப்படையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. ஒமைக்ரான், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரு கின்றன. அதற்கேற்ப 600 அல்லது 700 பேர் என்ற அளவில் வாக்குச்சாவடி ஏற் படுத்தலாம் என்றும் அரசியல் கட்சியி னர் தெரிவித்தனர். இதுகுறித்து தேர் தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமென்றும் மாவட்ட நிர் வாகத்தை அனைத்துக் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.