பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிட கட்டுமான பணிகள், கொளத்தூர் - அணைப்பாடியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் சா.குடிக்காடு பகுதியில் நகரும் நியாய விலை கடையினை திங்கட்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.