districts

img

நீட், நெட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து புதுச்சேரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவிவிலக கோரிக்கை

புதுச்சேரி, ஜூன் 22- ஒன்றிய பாஜக அரசால் நடத்தப்பட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை  கண்டித்து புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

நீட், கியூட் மற்றும் யுஜிசி நெட் தேர்வு களை நடத்துவதில் தொடர்ந்து குளறுபடி களை தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தி  வருகிறது. சமீபத்திய பல்கலைக்கழகங் களுக்கான நுழைவுத் தேர்வில், தேர்வு மைய  ஒதுக்கீட்டில் குளறுபடி மற்றும் நீட் தேர்வு முடிவுகளில் ஏராளமான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண், ஒரே தேர்வு மையத் தில் எழுதிய மாணவர்கள் முழு மதிப்பெண்  மற்றும் வினாத்தாள் கசிவு என தொடர்ந்து  நாடு முழுவதும் நடக்கக்கூடிய நுழைவுத்  தேர்வுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது குளறுபடி நடந்துள் ளது கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி விலக கோரி இப் போராட்டம் நடை பெற்றது. 

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒன்றிய பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.   சங்கத்தின் மாநில  செயலாளர் பிரவீன் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில பொருளா ளர் ரஞ்சித்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். நிர்வாகிகள் அகிலா, அரசன், பாபு, யுவராஜ் உட்பட திரளான மாணவர்கள்  போராட்டத்தில் பங்கேற்றனர்.