புதுச்சேரி டிச. 13- புதுச்சேரி பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட வில்லியனூரில் உள்ள கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரியில் சமூக செயல் பணி துறையில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஷசி, மாணவி களுக்கு முறையாக பாடம் நடத்துவதில்லை. அப்படியே பாடம் நடத்தினாலும் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்துவதில்லை. கள ஆய்விற்கும் வராமல் மாணவர்களையே அனுப்பி வைப்பதும். அப்படியே மாண வர்கள் கள ஆய்வுக்கு சென்று செய்முறை அறிக்கையை சமர்ப்பித்தாலும் அதை உரிய காலத்தில் திருத்தம் செய்து கொடுப்பதில்லை. மேலும் மாணவிகளிடம் ஒருமை யில் பேசுவது, மாணவிகள் அணி யும் ஆடைகளை வைத்து கிண்டல் செய்து வருவது, கல்லூரியில் பணியாற்றும் பெண் ஆசி ரியர்களை கேலியாக பேசுவதுமாக உள்ளார் என்று மாணவிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.ஏற்கனவே ஆசிரியர் ஷசி மீது பாலியல் புகார் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஆசிரியர் ஷசி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதில் வேறு ஆசிரியரை நிய மிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் மாணவிகள் புதுச்சேரி கல்வித்துறை செயலாளரை சந்தித்து புகார் மனு அளிக்க தலைமை செயலகம் சென்றனர். அப்போது செயலர் ஜவகர் அலுவல் வேலையாக வெளியே சென்று இருப்பதால் அவரது அலுவலகத்தில் புகார் மனுவை மாணவிகள் அளித்தனர். மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.