புதுச்சேரி, டிச. 22- இலவச குடிமனைப் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலுள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதுச்சேரில் பாகூர் கொம்யூனுக்கு உட்பட்ட குருவிநத்தம் பெரியார் நகரில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் மக்க ளுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் அதை கருத்தில் கொண்டு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. கட்சியின் பாகூர் கொம்யூன் செய லாளர் பி.சரவணன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில், மாநிலச் செய லாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், பிரபுராஜ், கமிட்டி உறுப்பி னர்கள் வடிவேல், சேகர், கிளைச் செய லாளர் அரிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிகாரி உறுதி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை இயக்குனர் கட்சி தலை வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலம் ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் இலவச மனை பட்டா வழங்குவதற்கு நட வடிக்கை எடுப்பதாகவும் உறுதி யளித்தனர். இதையடுத்து அனை வரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.