புதுக்கோட்டை, அக்.17 - புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண் டார்கோவில் ஒன்றியத்தில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி அமைத்துத் தர வேண்டுமென தமிழ்நாடு முதல மைச்சருக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வாயிலாக எம்.சின்னதுரை சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத் திலேயே மிகவும் பின்தங்கிய ஒன்றி யங்களில் குன்றாண்டார்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஏழை, எளிய குடும் பத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளியூர்களுக்குச் சென்று உயர்கல்வி பெறுவதற்கு அவர்களின் பொருளா தாரம் இடம் தருவதில்லை. இந்தப் பகுதியில் அரசு கலை, அறி வியல் கல்லூரியோ வேறு எந்த அரசு கல்வி நிறுவனங்களோ கிடையாது. எனவே, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்துள்ள குன் றாண்டார்கோவில் ஒன்றியத்தில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி அமைத்துத்தர வேண்டும். கீரனூர் பேரூராட்சி மற்றும் அத னைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் நடை பெறுகிறது. எனவே, இப்பகுதி மக்க ளின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தனியாக பைப் லைன் அமைத்து விநியோகம் செய்ய வேண்டும். கீரனூரில் தற்போது உள்ள பேருந்து நிலையம் போதிய இட வசதியின்றி உள்ளது. மேலும், பெரும் பாலான பேருந்துகள் புறவழிச்சாலை வழியாகச் சென்றுவிடுவதால் கீரனூ ரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்ற னர். எனவே, கீரனூரையொட்டி செல்லும் புறவழிச்சாலையிலேயே புதிய பேருந்து நிலையம் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.