அறந்தாங்கி, செப்.23 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து பணி யாளருக்கும் பணி பதிவேடு பதிவு செய்ய வேண்டும். ஊராட்சியில் வேலை செய்து வரும் ஊழியர்களை டிஎன்ஆர்டி. கணினி யில் பதிவு செய்து நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறைத் தொழிலாளர்கள் (சிஐடியு) சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர் ஆர். சுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர். க.முகமத லிஜின்னா கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் நூற்றுக் கணக்கான சிஐடியு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.