அறந்தாங்கி, செப்.22- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி யில் தந்தை பெரியார் 144-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உணர்வாளர் களால் இணைய வழியில் பள்ளி மாண வர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. இதில் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 15 பேர் கலந்துகொண்டனர். 6 - 8-ஆம் வகுப்பு பிரிவில் முதல் மூன்று பரிசுகளையும் மற்றும் சிறப்பு பரிசுகளையும் வெள்ளூர் பள்ளி மாணவர் கள் பெற்றனர். மணமேல்குடி திமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும். ஒன்றிய கவுன்சிலருமான சக்தி ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாள ரும், ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலை வருமான சீனியார் ஆகியோர் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சிறப்பு பரிசுகள் பெற்ற வெள்ளூர் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரு.இராமநாதன், அசார், மணமேல்குடி திராவிடர் கழக தலைவர் லாவண்யா, மாதர் சங்கம் லதா ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.