புதுக்கோட்டை, ஏப்.29- கணவன்-மனைவி இடையே உறவு சார்ந்த உள வியல் சிக்கல்கள் அதி கரித்திருக்கின்றன என்றார் மூத்த மனநல மருத்துவர் விஜய் நாகசாமி.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நிறை வடைந்த இந்திய மனநல மருத்துவச் சங்கத்தின், தமிழ்நாடு மாநிலக் கிளை யின் மாநில அளவிலான 2 ஆம் நாள் மனநல மருத்து வக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
மன அழுத்தம் முற்றிய நிலையில்தான் மனநோ யாளிகளாக மாறுகின்றனர். பொதுவாக மன அழுத்தம் என்பது எல்லோரிடத்திலும் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளி டையே ஏற்படும் மன அழுத்தம் சமீப காலமாக பல மாணவர்களைப் பாதித்து வருகிறது. அதே போல பல்வேறு பணியிடங்களிலும் உள்ள உளவியல் சிக்கல் மன அழுத்தத்தை ஏற் படுத்துகிறது. இவர்களுக் கெல்லாம் உரிய முறையில் கவுன்சிலிங் கொடுத்தால் அவர்கள் கல்வியிலும், பல் வேறு பணிகளிலும் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்.
கணவன்-மனைவிக்கு இடையிலான உறவு சார்ந்த மனநலச் சிக்கல்கள் அதி கரித்து, அதையொட்டி மன நல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை களைப் பெறுவது அதி கரித்திருக்கிறது. நமது முந்தைய தலைமுறை சந்திக்காத, எதிர்கொள்ளாத பல்வேறு உறவு சார்ந்த சிக்கல்களை இன்றைய இளைய தம்பதியினர் எதிர் கொள்கிறார்கள்.
இதன் விளைவாக அவர்கள் கூடுதல் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் கள். இதற்காக மருத்துவ ஆலோசனையையும் எதிர் பார்க்கிறார்கள். எனவே, மனநல மருத்துவர்கள் கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள் சார்ந்தும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மாலை அமர்வில், மனநல மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பன்னீர்செல்வம், புதுக் கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பெ.ரவி, இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் அ.முகமது சுல் தான் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில், மூத்த மனநல மருத்துவர்கள் வி.ஜெயந்தினி, ராஜ்குமார், ராஜேஸ்வரி, விஜய் நாக சாமி ஆகியோர் சிறப்பிக்கப் பட்டனர். முன்னதாக புதுக் கோட்டை மாவட்டச் செய லர் ரெ.கார்த்திக் தெய்வ நாயகம் வரவேற்க, பொருளாளர் அ.சோபியா நன்றி கூறினார்.