புதுக்கோட்டை, மார்ச்.11- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கின்றன. இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்தி ருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட் டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன் லைன்) பெறப்பட்ட வருமா னச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதா ரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறி ஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதி விறக்கம் செய்து கொள்ள லாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவ ருக்கு திங்கள்தோறும் உத வித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவ ரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.03.2023க்குள் அளிக் கப்பட வேண்டும்.