districts

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

அறந்தாங்கி, செப்.22-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறி வியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.  இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய  அறிவியல் தொழில்நுட்ப மற்றும் பரிமாற்ற குழுமம் வழிகாட்டுதலுடன், தமிழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கி ணைத்து நடத்தும் 30-ஆவது தேசிய குழந் தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி ஆசிரியர் களுக்கு அறந்தாங்கியில் பயிற்சியளிக்கப் பட்டது. பயிற்சி முகாமிற்கு அறந்தாங்கி அரசு  ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் கே.தெய்வக்கனி தலைமை  வகித்தார். அறந்தாங்கி கோட்டாட்சியர் எஸ்.  சொர்ணராஜ்  பயிற்சியை தொடங்கி ஆசிரி யர்கள் மாணவர்களை எவ்வாறு ஆய்வாளர் களாக உருவாக்குவது என்பது குறித்து பேசி னார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.இராமதிலகம், அறிவியல் இயக்க  மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ் ணன், சென்னை ஐஐடி யின் தொழில்நுட்ப உதவியாளர் அ.சிவசந்தோஷ், கருத்தாளர் கள் மா.குமரேசன், சி.ஷோபா, ஆ.செல்வ ராஜ், செ.இளையராஜா ஆகியோர் பேசினர். அறிவியல் இயக்கம் கல்வியிலும், மக்கள் மத்தியிலும் செய்துவரும் பணிகள் குறித்து  அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு. முத்துக்குமார் பேசினார்.  முன்னதாக மாவட்ட இணைச் செயலா ளர் க.ஜெயராம் வரவேற்றார். பயிற்சிக்கான  ஏற்பாடுகளை அறிவியல் இயக்க பொறுப் பாளர்கள் நாகூர்கனி, பா.கார்த்திக், உதவி தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கிய மெர்சி,  இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். ஒன்றிய  அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பா ளர் எம்.கணேசன் அனைவருக்கும் நன்றி கூறி னார். இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ம. வீரமுத்து நிறைவுரையாற்றினார்.

;