பொன்னமராவதி, ஏப்.16 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு விரட்டுமாடு, மஞ்சுவிரட்டு போட்டி நடந் தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக் கல், திருச்சி உள்ளிட்ட மாவட் டங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட காளைகளும், 500 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட னர். சுற்று வட்டார ஊர் களைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளத்துடன் ஜவுளி கொண்டு வந்தனர். ஆல வயல் மிராசு அழகப்பன் அம்பலம் தலைமையில் நடை பெற்ற போட்டியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.