districts

ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக மாற்றுவதற்கு சட்ட நடவடிக்கை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை, செப்.19 - ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விளையாட்டாக மாற்ற சட்ட விதி களை உருவாக்குவதற்கு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை  தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் செப்டம்பர் 12 முதல் 18  வரை நடைபெற்றுள்ளது. இதில் வெற்றி  பெற்ற வீராங்கனைகளுக்கு முதலமைச் சர் பரிசுகளை வழங்கி சிறப்பித்துள் ளார். எதிர்காலத்தில் சென்னையில் சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கு முதலமைச்சர் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு மைதானம் இதுவரை  உலகத்தில் இல்லாத வகையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் மதுரை யில் அமைய உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை விளையாட்டாக மாற்று வதற்கு சட்ட விதிகளை உருவாக்குவ தற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதற்கான நடவடிக் கைகள் முழு வடிவம் பெற்ற பிறகு, தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.  விளையாட்டுத் துறையை தமிழக  முதலமைச்சர் நேரடி பார்வையில் கை யாண்டு வருகிறார். தேவைக்கேற்ப சிறப்பு நிதிகளை ஒதுக்கி விளை யாட்டுத் துறையை மேம்படுத்தி வரு கிறார். 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வெற்றிக்கு பிறகு உலக மக்க ளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் விளையாட்டு தலைநகர மாக சென்னையை மாற்றுவதற்கான நட வடிக்கையில் முதல்வர் ஈடுபட்டுள் ளார். பிளாஸ்டிக் ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலமாகத் தான் வெற்றியடைய முடியும். முதற் கட்டமாக ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் பல லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒருங்கிணைத்து மறு சுழற்சி செய்வதற்கான நடவடிக்கை கள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.