புதுக்கோட்டை, நவ.10- காவிரி, வைகை, குண் டாறு இணைப்புத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள வெள்ளாறு, வெட்டாறு, அம்புரியாறு களை இணைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்துள் ளார். புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி வட்டம் மற மடக்கி வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலை மையில் புதனன்று நடை பெற்றது. இம்முகாமில் கலந்து கொண்டு ரூ.2.45 கோடி மதிப்பலான தலத்திட்ட உத விகளை வழங்க அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசு கையில், ‘‘மக்கள் தொடர்பு முகாமில் 1,368 பயனாளிக ளுக்கு ரூ.2.45 கோடி மதிப் பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளது. ஏழை, எளிள மாண வர்கள் உயர்கல்வியைப் பெற வேண்டும் என்பதற் காக ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி அழியாநிலையில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் 40,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், போக்கு வரத்து நெரிசலை குறைக் கும் வகையில் ஆலங்குடி யில் புறவழிச்சாலையும், வம் பன் அருகில் துணை மின் நிலையமும் அமைக்கப்பட வுள்ளது. மேலும், காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் வெள்ளாறு, வெட்டாறு, அம்பலியாறு உள்ளிட்டவைகளை இணைக்கவும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, ஒன்றியக் குழுத் தலைவர்கள் வள்ளி யம்மை தங்கமணி (திரு வரங்குளம்), மகேஸ்வரி சண் முகநாதன் (அறந்தாங்கி), அறந்தாங்கி வருவாய் கோட் டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளாண் இணை இயக்கு நர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் இராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.