புதுக்கோட்டை, டிச.21- கீரமங்கலம் பால் கூட்டுறவு சங்கத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயி களிடம் இருந்து பால் கொள்முதல் செய் யப்படும். அதில், உள்ளூரில் விற்பனை செய்தது போக மீதமுள்ள பால் ஆவி னுக்கு அனுப்பப்படும். இந்நிலையில், கொள்முதல் செய்யப் படும் பாலில் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும், அத னால் சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்ட அள வுக்கு பால் அனுப்புவதில் சிரமம் ஏற்படுவ தாகவும் அலுவலர்கள் கூறி வந்தனர். இதை யடுத்து, உள்ளூரில் கொள்முதல் செய் யப்படும் பாலில் இருந்து 10 சதவீதத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என் றும், மீதத்தை ஆவினுக்கு அனுப்ப வேண் டும் எனவும் கூட்டுறவு சங்க அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 10 சதவீதத்துக்கும் மேல் உள்ளூரில் பால் விற்பனை செய்து வந்த கீரமங்கலம், மேலூர், தாஞ்சூர், கறம்பக் குடி, மேலமுத்துடையான்பட்டி, கறம்பக் குடி மகளிர், கோட்டைக்காடு, மலைக்குடிப் பட்டி, வடகாட்டுப்பட்டி, குழிபிறை, வி. லெட்சுமிபுரம், ஒலியமங்கலம், மேலப் பொன்னன்விடுதி ஆகிய 14 பால் கூட்டு றவு சங்கங்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த வாரம் புதுக்கோட்டை துணைப் பதிவாளர் (பால்வளம்) நோட்டீஸ் வழங்கினார். இதையடுத்து, கீரமங்கலம் பால் கூட்டு றவு சங்கத்தில் இருந்து உள்ளூரில் யாருக் கும் பால் விற்பனை செய்யப்படாததைக் கண்டித்து, வாடிக்கையாளர்கள் கடந்த டிச.10 அன்று பால் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அதன்பிறகு, அலுவலர்கள் சமா தானம் செய்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், மீண்டும் உள்ளூரில் பால் விநியோகம் செய்யக் கூடாதென அலு வலர்கள் கெடுபிடி காட்டியதையடுத்து, செவ்வாயன்று மீண்டும் உள்ளூர் வாடிக்கை யாளர்களுக்கு பால் விற்பனை செய்யப்பட வில்லை. பால் விற்பனை செய்யப்படாத தால் டீக்கடைகள் மூடப்பட்டன. இதையறிந்த வாடிக்கையாளர்கள் திரண்டு, கூட்டுறவு சங்கத்துக்கு வந்த பால் கொள்முதல் வாகனத்தை சிறைபிடித் ததோடு, சங்க அலுவலகத்தை வாடிக்கை யாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, கீரமங்கலம் போலீசார், பால் கூட்டுறவு சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவி டப்பட்டது.