புதுக்கோட்டை, அக்.9- அங்கன்வாடி ஊழியர்கள் அனைவ ருக்கும் உடனடியாக புதிய செல்போன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேரவை கூட்டம் எம்.விஜயலட்சுமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.பத்மா கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட தலைவர் கே.முகமது அலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி நிறைவுரை யாற்றினார். மாவட்ட தலைவராக எம்.விஜயலட்சுமி, செயலாளராக ஏ.சி.செல்வி, பொருளாளராக எஸ்.சவுரியம்மாள், மாநில செயற்குழு உறுப்பினராக கே.எம்.ரேவதி உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கே.எம்.ரேவதி நன்றி கூறி னார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்களை அரசு ஊழியராக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டு மொத்த பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியா ளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட செல்போன்களின் காலம் காலாவதியாகி விட்டதால் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் புதிய செல்போன்களை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.