அறந்தாங்கி, அக்.3 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி அருகே பாலாஜி என்பவருக்கு சொந்தமான நியூ திருப்பதி இருசக்கர வாக னம் பழுது நீக்கும் கடை உள்ளது. இக்கடையின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை மேல் சென்ற மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு திங்க ளன்று அதிகாலை, இந்த டூவீலர் ஒர்க் ஷாப் கடை முழுவதும் தீயில் எரிந்து சேதமாகியது. இச்சம்ப வம் குறித்து அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் கடையின் உள்ளே பழுது பார்க்க வைக்கப்பட்டி ருந்த 11 இருசக்கர வாக னங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.