புதுக்கோட்டை, மார்ச் 29- புதுக்கோட்டை அருகே 10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பழனியாண்டி (66). பூசாரியான இவரிடம், கடந்த 2022 மார்ச் மாதம், தொடர் வயிற்று வலி காரணமாக மந்திரிப்பதற்காக 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை அவரது தந்தை அழைத்து வந்துள்ளார். சிறுமிக்கு கருப்பு அண்டியிருப்ப தாகவும் தனியே மந்திரிக்க வேண்டும் என் று ம் கூறி, மாணவியை இரு முறை பூசாரி பழனி யாண்டி பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். இதனால் அச்சிறுமி கருவுற்றார். இதை யடுத்து, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பழனியாண்டியைக் கைது செய்து, வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா புதன்கிழமை தீர்ப்பளித்தார். இதில், பாலியல் வன்கொடுமை குற் றத்துக்காக பழனியாண்டிக்கு ஆயுள் தண்ட னையும், ரூ.2.50 லட்சம் அபராதமும், மேலும், குற்றத்தை மறைக்கும் நோக்கில் மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையான ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.