புதுக்கோட்டை, செப்.6 - செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியாரின் 101- வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ் வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 101 மாணவர்கள் பாரதியாரின் வேடம் அணிந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு சென்றனர். பின்னர் பாரதியாரின் பொன்மொழிகளை பதாகைகளாக ஏந்தி நின்ற மாணவர்களோடு மாவட்ட ஆட்சியர் கவிதாராமு ஆட்சியர் அலு வலக வளாகத்தில் ஊர்வலமாக சென்றார். பின்னர் 101 மாணவர்களும் ஆட்சியருக்கு பாரதி யாரின் புத்தகத்தையும் அவரின் படத்தையும் வழங்கி பாரதியாரின் நினைவை போற்றினர். மேலும் வேடமணிந்த மாணவர்கள் பாரதி யார் குறித்து பாடல் பாடியும் பேசியும் அவரது பெருமைகளை எடுத்துரைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாரதியார் வேடம் அணிந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி அவர்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்வில் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.